இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கடந்த சனிக்கிழமை மிகவும் சிறப்பான நாளாக அமைந்தது. அன்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்ட ரோகித் சர்மா அதற்கான காரணத்தை தற்பொழுது கூறி இருக்கிறார்.
2026 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத்தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்க இருக்கிறது. இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதும் விராட் கோலி ஓய்வு பெற்றாலும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொஞ்சம் யோசிப்பார் என்று கருதப்பட்டது.
இந்த நிலையில் விராட் கோலி தன்னுடைய சர்வதேச டி20 கிரிக்கெட் ஓய்வை அறிவித்ததுமே இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் சிறிது நேரத்தில் தன்னுடைய ஓய்வை அறிவித்துவிட்டார். அவருடைய அதிரடியான பேட்டி தற்பொழுது நன்றாகவே இருந்து வருகிறது. மேலும் அவர் சிறப்பான கேப்டனாகவும் இருக்கிறார். இந்த நிலையில் அவர் ஓய்வை அறிவித்தது ஆச்சரியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இன்னொரு பக்கத்தில் கம்பீர் பயிற்சியாளராக வந்தால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் இந்திய டி20 கிரிக்கெட்டில் விரும்ப மாட்டார் என்றும், அந்த நெருக்கடியை இரண்டு மூத்த வீரர்களும் ஓய்வு பெற காரணமாக இருந்தது என்றும் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவுகிறது.
தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசிய காணொளி ஒன்று புதிதாக வெளிவந்திருக்கிறது. அதில் ரோகித் சர்மா “சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் மனநிலையில் நான் கிடையாது. ஆனால் இதுதான் எனக்கு ஓய்வு பெற சரியான சூழலாக இருந்தது. உலகக் கோப்பையை வென்று ஓய்வு பெறுவதை விட சிறந்த ஒன்று இருக்க முடியாது.
இதையும் படிங்க : ரோகித் இத நீங்க நோட் பண்ணல.. ரிஷப் பண்ட் உங்களுக்காக பெரிய வேலை பார்த்து இருக்கான் – ரவி சாஸ்திரி கருத்து
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிதான் என்னுடைய கடைசி போட்டி. நான் டி20 கிரிக்கெட்டை ஆரம்ப காலத்தில் இருந்து ரசித்து விளையாடி வருகிறேன். இந்த வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இதைவிட சிறந்த நேரம் இருக்க முடியாது. நான் உலகக் கோப்பையை வென்று இதைத்தான் சொல்ல விரும்பினேன்” என்று கூறியிருக்கிறார்.






