அணியினர் மற்றும் ரசிகர்களுக்கு ஜஸ்பிரித் பும்ரா உருக்கமான ட்விட்டர் பதிவு!

0
342
Bumrah

ஜஸ்பிரித் பும்ராவின் முதுகுப்பகுதி காயத்தின் தன்மை, அவர் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இருப்பாரா? என்கின்ற கேள்விகளுக்கு நேற்று இறுதியாக உறுதியான முடிவு அறிவிக்கப்பட்டு இருக்கிறது!

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா வெளியேறுகிறார் என்று நேற்று உறுதியாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா கூறும்பொழுது
” ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் இந்திய அணியிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பிசிசிஐ மருத்துவக்குழு நிராகரித்துள்ளது. விரிவான மதிப்பீட்டை தொடர்ந்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.

ஜஸ்பிரித் பும்ராவின் முதுகுப் பகுதி காயம் என்பது, அவர் பந்துவீசும் முறையால் முதுகுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு அங்கு வலி உருவாவது. இதற்கு அறுவைசிகிச்சை மாதிரி எந்த மருத்துவமும் கிடையாது. இதற்கு சரியான ஓய்வுதான் மருத்துவம். எனவே அவருக்கு குறைந்தது 6 முதல் 8 வாரங்கள் குறைந்தபட்சம் ஓய்வு தேவைப்படுகிறது. இந்தக் காரணத்தால் அவர் மன வேதனையோடு டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்து வெளியேறுகிறார்.

இந்த எதிர்பாராத வருந்தத்தக்க நிகழ்வு குறித்து ஜஸ்பிரித் பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் ” டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் ஒரு அங்கமாக நான் இருக்க மாட்டேன் என்பது மன வேதனையாக இருக்கிறது. ஆனால் என் அன்புக்குரியவர்கள் இடமிருந்து நான் பெற்ற வாழ்த்துக்கள் கவனிப்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி. நான் குணம் அடைந்தவுடன் ஆஸ்திரேலியாவில் இருக்கும் அணியினரை உற்சாகப்படுத்துவேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய t20 பந்துவீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை 60 போட்டிகளில் 70 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு இறுதிகட்ட ஓவர்களில் ஒரு பின்னடைவுதான்!