இந்திய டீம்ல 2 பேர் பத்தி ஓவர் திங்க் பண்ணாதிங்க.. உங்கள மொத்தமா முடிச்சிடுவாங்க – மோர்னே மோர்கல் அட்வைஸ்

0
695
Morkel

இன்று டி20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப்போட்டியில் மோதிக்கொள்ள இருக்கின்றன. உலகக்கோப்பை வரலாற்றில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மோர்னே மோர்கள் அந்த அணிக்கு முக்கிய அறிவுரை ஒன்றைக் கூறியிருக்கிறார்.

தென் ஆப்பிரிக்கா அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது. அதே சமயத்தில் அந்த அணி எல்லா போட்டிகளையும் கடைசி நேரத்தில் போராடிய வென்று வந்திருக்கிறது. உதாரணமாக நேபாள் அணிக்கு எதிராக ஒரு ரன் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் ரோகித் சர்மா அணியை முன்னின்று வழி நடத்தி வருகிறார். அதே சமயத்தில் பந்து வீச்சில் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இந்திய அணிக்கு பெரிய திருப்புமுனைகளை உருவாக்குகிறார்கள். மேலும் பேட்டிங்கில் சூரியகுமார் யாதவ் பந்துவீச்சில் அர்ஸ்தீப் சிங் என அவரவர் சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள்.

அர்ஸ்தீப் சிங் ஏழு போட்டிகளில் 15 விக்கெட்டுகள், பும்ரா ஏழு போட்டிகளில் 13 விக்கெட்டுகள், குல்தீப் யாதவ் 4 போட்டியில் 10 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்கள். அக்சர் படேல் பந்துவீச்சில் தேவையான விக்கெட்டை சரியான நேரத்தில் கைப்பற்றி சிறந்த திருப்புமுனையை ஏற்படுத்துகிறார்.

- Advertisement -

இதுகுறித்து மோரனே மோர்கல் கூறும்போது “தென் ஆப்பிரிக்க அணி அந்த நேரத்தில் என்னவோ அதை எடுத்துக் கொண்டு விளையாட வேண்டும். பும்ரா மற்றும் குல்தீப் பற்றி ஓவர் திங்கிங் செய்யக்கூடாது. பும்ரா முதல் இரண்டு ஓவர்களில் பந்து வீசி விக்கெட் கைப்பற்றதான் செய்வார். மேலும் மீதம் இரண்டு ஓவர்களில் கடைசியில் வந்து நெருக்கடி தருவார். அவர்கள் இதற்காக முன்கூட்டியே பும்ராவை அடித்து விளையாட போகிறார்களா? பெரிய ஸ்கோருக்கு செல்ல விரும்புகிறார்களா? என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

இதையும் படிங்க : ஆஸி வெளியிட்ட டி20 உ.கோ பிளேயிங் XI.. ரோகித் கேப்டன் கிடையாது.. 2 இந்திய முக்கிய வீரர்களுக்கு இடமில்லை

குல்தீப் யாதவையும் விலக்கி வைக்க முடியாது. அவர் இந்திய அணிக்கு மிடில் ஓவர்களில் மிகச் சிறப்பாக இருக்கிறார். அவர் ஒரு விக்கெட் டேக்கர். அவர் ஆட்டத்தையே முடித்து விடலாம் அல்லது திருப்புமுனையை உருவாக்கலாம். இந்த மாதிரியான நேரத்தில் தென் ஆப்பிரிக்கா பதட்டம் இல்லாமல் சரியாக விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -