ஐபிஎல்-ல் யார்க்கரை கத்துக்கல.. நான் அத செலக்ட் பண்ணது வேற இடத்துல – பும்ரா ஸ்பெஷல் பேட்டி

0
56
Bumrah

இன்றைய கிரிக்கெட் உலகத்தில் மூன்று வடிவத்திலும் மிகப்பெரிய மதிப்புக்குரிய வீரராக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார். டி20 உலகக் கோப்பை பயிற்சி போட்டிக்கு முன்பாக தன்னுடைய செயல்முறைகள் குறித்து அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

தற்பொழுது டி20 உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் இந்திய அணியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வீரராக பும்ரா இருக்கிறார். பேட்டிங் யூனிட்டில் விராட் கோலி என்றால் பவுலிங் யூனிட்டில் பும்ராதான்.

- Advertisement -

2022 ஆம் ஆண்டு அவருக்கு முதுகில் ஏற்பட்ட காயம் மோசமான விளைவுகளை உருவாக்கியது. இதன் காரணமாக அந்த ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை இரண்டையும் அவர் தவறவிட்டார். இதற்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்து 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கு வந்த அவர் வேறு மாதிரியான செயல் திறனில் அசத்தினார்.

தற்போது இது பற்றியெல்லாம் பேசியிருக்கும் அவர் கூறும் பொழுது “நான் என்னுடைய காயத்தில் இருந்து மீண்டு வந்த காரணத்தினால் நாள் என்னுடைய விளையாட்டை மட்டுமே ரசிக்க முயற்சி செய்கிறேன். விளையாட்டில் நிறைய நிச்சயம் அற்ற தன்மைகள் இருக்கிறது. அவற்றை நம்மால் எதுவும் செய்ய முடியாது. எனவே நான் என்னுடைய செயல்முறையில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.

ஏனென்றால் சில விஷயங்கள் என்னுடைய வழியில் செல்லும்; சில விஷயங்கள் என்னுடைய வழியில் செல்லாது. இவையெல்லாம் என்னுடைய செயல்பாட்டில் ஒரு பகுதியாக இருக்கும். நான் கிரிக்கெட்டை மிகவும் விரும்பியதால் தான் இந்த விளையாட்டை விளையாட வந்திருக்கிறேன் என்று புரிந்து கொண்டிருக்கிறேன். என்ன முடிவு வரப் போகிறது என்பதில் கவனம் செலுத்துவதை விட, செயல் முறையில் கவனம் செலுத்தினால், நீங்கள் அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ள முடியும். விளையாட்டை ரசிக்கவும் செய்வீர்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் பிரச்சனை இல்லை.. ஹர்திக் செய்ய முடிந்த இந்த வேலையையே செய்யறது இல்லை – கங்குலி விமர்சனம்

நான் வளரும் பொழுது நிறைய ரப்பர் பந்து மற்றும் டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாடினேன். கோடைகாலத்தில் என்னுடைய நண்பர்களுடன் இந்த வகையான கிரிக்கெட் நிறைய விளையாடி இருக்கிறேன். அப்பொழுது விக்கெட் எடுப்பதற்கான சிறந்த வழியாக யார்க்கர் இருப்பதை அறிந்தேன். நான் அங்கிருந்தே அதை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்” என்று கூறியிருக்கிறார்.