பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்வதற்கு வழக்கம் போல் பும்ராவின் பந்துவீச்சு மிகுந்த தாக்கத்தை செலுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அவர் தன்னுடைய ரோல் என்ன? என்பது பற்றி பேசி இருக்கிறார்.
இந்த தொடரில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சிவப்பு மண் ஆடுகளம் கொடுக்கப்பட்டது. இரண்டாவது போட்டி நடைபெற்ற கான்பூரில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான களிமண் கருப்பு ஆடுகளும் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வித்தியாசமான சூழலில் சிறப்பான செயல்பாடு
சென்னை சேப்பாக்கத்தில் பவுன்ஸ் ஆடுகளத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா ஐந்து விக்கெட் கைப்பற்றி இருந்தார். அதே சமயத்தில் சுழல் பதிச்சுக்கு சாதகமான கான்பூர் மைதானத்தில் மொத்தம் ஆறு விக்கெட் கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.
இது குறித்து பேசி இருக்கும் பும்ரா கூறும் பொழுது “நான் இந்த மந்திரவாதி என்கின்ற பட்டத்தை பற்றி எல்லாம் கவனம் கொடுப்பது கிடையாது. நாங்கள் இரண்டு நாட்களில் பெற்று இருக்கும் இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இதில் நாம் நம்முடைய அனுபவத்தை பயன்படுத்துகிறோம். இதை எளிதாக சொல்லி விடலாம் ஆனால் செய்வது மிகவும் கடினமான ஒன்று. இது சென்னையில் கிடைத்த ஆடுகளத்தில் இருந்து மிகவும் வித்தியாசமானது. எனவே நாம் நம் முன் இருக்கும் சிக்கல்களை தீர்க்க வேண்டும்”
இவருக்கு நல்ல இதயம்
மேலும் பேசிய பும்ரா கூறும்பொழுது “நாங்கள் இந்தியாவில் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். எனவே விக்கெட்டின் தன்மையை புரிந்து கொள்கிறோம். மேலும் நாம் சரியான ஆப்ஷனை கண்டறிந்து மூத்த வீரர்களுடன் உரையாடல் செய்ய வேண்டும். இப்போது நான் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு உதவி செய்யும் ஒரு ரோலில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்”
“போட்டியின் போது ஆகாஷ் தீப் அடிக்கடி என்னிடம் வந்து ‘நான் என்ன செய்தால் சரியாக இருக்கும்?’ என நிறைய விஷயங்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பார். அவர் நல்ல இதயம் படைத்தவர். அவர் எப்போது பந்து வீசினாலும் சிறந்ததை கொடுக்கிறார். அவர் தன்னுடைய வலிமையில் இருந்து வலிமைக்கு செல்லக்கூடியவராக இருக்கிறார்”
இதையும் படிங்க : அவர் எங்ககிட்ட சொல்லாம போய் அத செஞ்சார்.. அவர் கூட ஆடறது எனக்கு பெருமையா இருக்கு – அஸ்வின் பாராட்டு
“எங்களுக்கு டி20 உலக கோப்பைக்கு பிறகு நிறைய ஓய்வு கிடைத்தது. நாங்கள் நீண்ட டெஸ்ட் தொடர்களுக்கு தயாராவதற்கு இப்படியான ஓய்வு கொடுக்கப்பட்டது. எங்கள் உடலை புரிந்து கொள்வதோடு, நாங்கள் எத்தனை ஓவர்கள் வீச வேண்டியது இருக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். நீண்ட சீசன் இருப்பதால் கிடைத்த ஓய்வில் குடும்பத்துடன் கொஞ்சம் செலவிட்டு மீண்டும் நாங்கள் அணியுடன் வந்து இணைந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.