இன்று இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் பங்களாதேஷ் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்து வலிமையான நிலையில் இருக்கிறது.
தற்போது மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு பங்களாதேஷ் அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி காலை மைதானத்தில் இன்று தொடங்கியது.
இலங்கை அட்டகாச ஆரம்பம்
இந்த போட்டிக்கான டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி தைரியமாக பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. பங்களாதேஷ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சத்மன் இஸ்லாம் 53 பந்தில் 14 ரன்கள், அனாமுல் ஹக் ரன் ஏதும் இல்லாமல் வெளியேறி நெருக்கடியை கொண்டு செய்தார்கள்.
இதைத்தொடர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு வந்த மூமினுல் ஹக் அதிரடியாக 33 பந்தில் நான்கு பவுண்டரிகள் உடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பங்களாதேஷ அணி 45 ரன்னுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பங்களாதேஷை மீட்ட ஜோடி
இதைத் தொடர்ந்து கேப்டன் நஜ்முல் சாந்தோ உடன் அனுபவ வீரர் முஸ்பிகிக்யூர் ரஹீம் ஜோடி சேர்ந்து பொறுமையாக விளையாடி அணியை மீட்க ஆரம்பித்தார்கள். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் இருவரும் அரை சதம் கடந்து தொடர்ந்து ஆட்டத்தை எடுத்துச் சென்றார்கள். இன்று ஆட்ட நாள் முடிவில் இந்த ஜோடியில் இருவருமே சதம் அடித்தவுடன், ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று அசத்தினார்கள்.
இதையும் படிங்க : 4 நாள் டெஸ்ட் போட்டிகள்.. சிறிய அணிகளுக்கு தனியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்த ஐசிசி திட்டம்
இன்று முதல் நாள் முடிவில் கேப்டன் நஜ்முல் சாந்தோ 260 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உடன் 136 ரன்கள், முஸ்பிக்யூர் ரஹீம் 186 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் எடுக்க, பங்களாதேஷ் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் குவித்திருக்கிறது. சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 443 பந்துகளில் 247 ரன்கள் குவித்திருக்கிறது. இலங்கை அணியின் பந்துவீச்சில் தரிந்து ரத்னாயகே 2 விக்கெட் கைப்பற்றினார்.






