பும்ரா தான் என் ரோல் மாடல்.. அவரை காப்பி அடிப்பேன்..உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் குறித்து ஆஸி. வீரர் கிரீன் கருத்து

0
14

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்க அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் நீண்ட காயத்திற்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார். இந்த நிலையில், பும்ராவை தாம் ஒரு ரோல் மாடலாக எடுத்து கொண்டு செயல்பட போவதாக அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு முதுகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு கம்பேக் கொடுத்த அவர், உலக கிரிக்கெட்டில் சில அற்புதமான சாதனைகளைப் புரிந்தார். 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா கோப்பை வென்றதற்கு, பும்ராவின் செயல்பாடு முக்கிய காரணமாகும்.

- Advertisement -

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரின் சிறந்த வீரர் விருதை வென்றார்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரீன், “அது மிகவும் சிறப்பானது. இது உங்களுக்கு நிறைய நம்பிக்கையை அளிக்கிறது.”

பும்ரா தான் ரோல் மாடல்:

“நான் அவருடன் மும்பை அணியில் நான் விளையாடவில்லை, ஆனால் அங்கு அவருடன் சிறிது நேரம் செலவிட்டேன். அவரைப் பார்க்கும்போது, அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறார் என்பதைப் பார்த்து, எனக்கு நிறைய நம்பிக்கை கிடைத்தது,”

- Advertisement -

“நான் எப்போதும் ஒரு காயத்தில் இருந்து ஒரு நம்பிக்கைக் ஒளியை தேட முயற்சித்தேன். நாங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடுகிறோம், வீட்டில் நேரம் செலவிடுவது கடினம். எனவே வீட்டில் சிறிது நேரம் செலவிடுவது. புத்துணர்ச்சி பெறவும், நண்பர்களுடன் மீண்டும் இணைவதற்கும், குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கும், உடற்பயிற்சி கூடத்தில் நேரம் செலவிடுவதற்கும், என் உடலை சரிசெய்வதற்கும் வாய்ப்பு கிடைத்தது.”

வேதனையாக இருந்தது:

“என் பேட்டிங் மற்றும் பந்துவீச்சைப் பற்றி நன்றாக சிந்திக்க முடிந்தது. அதை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று யோசித்தேன். நான் காயமடைந்தபோது, நிச்சயமாக கலவையான உணர்வுகள் இருந்தன. டெஸ்ட் கிரிக்கெட்டை தவறவிடுவது மிகவும் வேதனையாக இருந்தது. தோழர்கள் விளையாடுவதைப் பார்ப்பது சில நேரங்களில் கடினமாக இருந்தது. ஆனால் அதே நேரத்தில், 5-6 மாதங்கள் ஓய்வு பெறப் போகிறேன் என்பது எனக்கு தெரியும், இது எனக்கு மிகவும் தேவையாக இருந்தது,” என்று கிரீன் கூறினார்.

இதையும் பாருங்க: ஒரே ஓவரில் 6 பவுண்டரி.. பார்ம்க்கு திரும்பிய பிரித்வி ஷா.. மும்பை டி20 லீக் தொடரில் மிரட்டல் பேட்டிங்

கிரீன் ஏப்ரல் மாதம் கவுண்டி கிரிக்கெட்டில் கிளௌசெஸ்டர்ஷயர் அணிக்காக விளையாடி கிரிக்கெட்டுக்கு திரும்பினார். அதில், மூன்று சதங்கள் குவித்தார். இதுவரை அவர் ஆஸ்திரேலியாவுக்காக 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 1377 ரன்கள் குவித்து, 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -