இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போனில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலியா அணி தனது போராட்ட குணத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா ஒரு சிறப்பான சாதனை படைத்தது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக கருதப்படும் பும்ரா தனி ஒரு மனிதனாக ஆஸ்திரேலிய அணிக்கு தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வருகிறார். முதல் டெஸ்ட் போட்டியில் இவரது அபார பந்துவீச்சு இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்திய அணி தோல்வி அடைந்த இரண்டாவது போட்டி மற்றும் டிரா செய்த மூன்றாவது போட்டியிலும் இவரது பந்துவீச்சு தனித்துவமாக அமைந்தது.
இந்த நிலையில் தற்போது இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது போட்டியில் பும்ரா நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக 200 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். இந்த சூழ்நிலையில் இந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் இறுதியில் பும்ராவின் பெயர் நிச்சயமாக நினைவில் கொள்ளப்படும் என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” பும்ரா என்ன ஒரு பந்துவீச்சாளர். அவர் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு மந்திரவாதி தான். எப்படி மிகவும் தனித்துவமாக திகழ்கிறார் என்று ஆச்சரியமாக உள்ளது. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாம் முதல் இன்னிங்ஸில் ஏதோ செய்தார். பும்ரா முதல் இன்னிங்ஸ் முதல் ஸ்பெல்லில் 39 ரன்கள் மற்றும் 19 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால் அதற்குப் பிறகு ஸ்டம்புகள் சிதற அவரது விக்கெட் வீழ்த்தி சிறப்பாக விளையாடினார். இது வெறும் ஆரம்பம் தான் இந்த தொடரின் இறுதியில் எப்படி செல்ல போகிறது என்று தெரியாது.
இதையும் படிங்க:நாங்க இந்தியா அணிக்கு பயப்படவில்லை.. ஆனா இந்த காரணத்தாலதான் டிக்ளேர் செய்யல – லபுசேன் பேட்டி
இது பும்ராவின் மனதில் என்றும் நிலைத்திருக்கும். ஒரு இந்திய பவுலர் ஆஸ்திரேலியா கடற்கரையில் வந்து தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருக்கிறார். ஒரு டெஸ்ட் போட்டியோ அல்லது இரண்டு மூன்று இன்னிங்ஸ்களிலோ சிறப்பாக செயல்படுவது இன்னும் நிகழலாம். ஆனால் ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு கடினமாக இருப்பதாக நாங்கள் கூறுகிறோம். இங்குள்ள மைதானங்கள் மிகவும் கடினம். நிச்சயமாக இங்குள்ள வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மூட்டுகள் வலிக்க தொடங்கும்
ஆனால் பும்ரா 30 விக்கெட் வீழ்த்தி சிறப்பாக இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.






