நாங்க இந்தியா அணிக்கு பயப்படவில்லை.. ஆனா இந்த காரணத்தாலதான் டிக்ளேர் செய்யல – லபுசேன் பேட்டி

0
4653
Bumrah

இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நான்காவது நாளில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸை ஏன் டிக்ளேர் செய்யவில்லை என அந்த அணியின் மார்னஸ் லபுசேன் காரணத்தை கூறியிருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில், நான்காவது நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்ஸில், ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்திருக்கிறது. இதன் மூலம் அந்த அணி 333 ரன்கள் முன்னிலையும் பெற்று இருக்கிறது.

- Advertisement -

மெல்போர்ன் சேசிங் வரலாறு

இந்த குறிப்பிட்ட மைதானத்தில் 1924 ஆம் ஆண்டு 332 ரன்கள் சேஸ் செய்யப்பட்டு இருக்கிறது. அதற்குப் பிறகு பெரியவர்கள் எதுவும் சேஸ் செய்யப்பட்டது கிடையாது. இறுதியாக 2013 ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் 231 ரன்கள் சேஸ் செய்யப்பட்டது அதிகபட்சமாக இருக்கிறது. இங்கு நான்காவது இன்னிங்ஸ் விளையாடுவது சுலபமான காரியமாக இருக்கவில்லை.

இப்படி இருந்த பொழுதும் கூட ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸை இன்று டிக்ளர் செய்து, இந்திய அணியை 5 ஓவர்கள் ஆவது பேட்டிங் செய்ய வைக்க திட்டமிடவில்லை. அவர்கள் இன்று தொடர்ந்து பேட்டிங் செய்தார்கள். இத்தோடு நாளை ஆல் அவுட் ஆகும் வரையில் பேட்டிங் செய்வதற்கான திட்டத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.

- Advertisement -

டிக்ளர் செய்யாததின் காரணம் என்ன?

இது குறித்து மார்னஸ் லபுசேன் பேசும்பொழுது “நாங்கள் எங்களுக்கு சரியான ஆட்டத்தை கொண்டு இருந்தோம் என்று நினைக்கிறேன். இன்று நாங்கள் அவர்களுக்கு எதிராக பந்து வீச வருவது மற்றும் அவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குவதற்கான வாய்ப்பில் இருந்தோம். ஆனால் ஆடுகளம் இருந்த நிலைமை மற்றும் இந்திய பந்துவீச்சு சிறப்பாக இருந்தது, அவர்கள் எங்களை முதல் 40 ஓவரில் அழுத்தத்திற்கு உள்ளாக்கியது, நாங்கள் இன்று ரன்கள் எடுக்க முடியாமலும், டிக்ளர் செய்ய முடியாமலும் ஆக்கிவிட்டது”

இதையும் படிங்க : 99-8.. திரில் போட்டியில் ரபாடா அதிரடி.. தென் ஆப்பிரிக்கா WTC பைனலுக்கு தகுதி.. பாகிஸ்தான் பரிதாப தோல்வி

“ஒரு நேரத்தில் இந்திய அணிக்கு 250 முதல் 270 ரன்கள் மட்டுமே டார்கெட் இருந்திருக்கும். ஆனால் அந்த நிலைமையில் இருந்து எங்களுடைய கடைசி கட்ட பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடிய தற்பொழுது 333 ரன்கள் முன்னிலை கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்கான முழு பெருமையும் அவர்களுக்கு சேரும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -