இந்திய அணிக்கு நடப்பு டி20 உலக கோப்பையை வென்று தரக்கூடிய வீரர்கள் மிக முக்கியமானவராக, நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பரித் பும்ரா இருக்கிறார். இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சரை விட பும்ரா குறிப்பிட்ட ஒரு காரணத்தால் சிறந்தவர் என இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவன் கூறியிருக்கிறார்.
முழங்கை காயத்தால் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளாக விளையாடாமல் இருந்த ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு முழு வேகத்தில் திரும்பி இருக்கிறார். அனாயசமாக மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய அவரது திறமை எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது.
இன்னொரு பக்கத்தில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இந்திய அணிக்கு மிகப்பெரிய தூணாக வெற்றிகளில் இருந்து வருகிறார். ஐபிஎல் தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் வெளிப்படுத்திய பந்துவீச்சு செயல்பாடு அவரை வேறு ஒரு உச்சத்தில் வைத்திருக்கிறது.
இந்த நிலையில் இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்டீவன் பின் பும்ரா ஆர்ச்சரை விட சிறந்தவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதற்கான முக்கியமான காரணம் குறித்தும் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து ஸ்டீவன் பின் பேசும் பொழுது “ஜோப்ரா ஆர்ச்சரை நான் நேசிப்பதற்கு காரணம் அவர் எவ்வளவு காலம் வெளியில் இருந்து வந்தாலும் கூட மீண்டும் பழைய முறையில் அவர் மிகச் சிறப்பாக இருக்கிறார். அதே சமயத்தில் பும்ரா வெறித்தனமானவர் மற்றும் உலகில் சிறந்தவர். ஆனால் கண்டிஷனை மதிப்பிடும் வகையில் பும்ரா ஆர்ச்சரை விட சிறந்தவராக இருக்கிறார். இதனால் அவரே முன்னணியில் இருக்கிறார்.
இதையும் படிங்க : அகர்கர் இப்படி செஞ்சா நியாயமா?.. அதிகாரம் வந்தா என்ன வேணா பண்ணுவிங்களா – பாக் கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்த சேவாக்
இங்கிலாந்து அணி தற்பொழுது மிகவும் நம்பிக்கை உடன் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் இறுதியாக இரண்டு சிறிய அணிகளுக்கு எதிராக பெற்ற வெற்றி நம்பிக்கையை அதிகரித்திருக்கும். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது அவர்களுக்கு பயத்தை கொடுத்திருக்கும். ஆனால் ஒரு உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து சீரான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது என நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.