ஆஸ்திரேலியாவில் இதை கட்டாயம் செய்வேன்.. சக பவுலர்களுடன் இந்த 3 விஷயத்தை பேசணும் – பும்ரா பேட்டி

0
41
Bumrah

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வடிவம் டெஸ்ட் கிரிக்கெட் என்று கூறியிருக்கிறார். மேலும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் என்ன செய்ய இருக்கிறார்? என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.

தற்போது வேகப்பந்து வீச்சாளர்களில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக பும்ரா இருந்து வருகிறார். அவருக்கு பந்தின் நிறமோ அல்லது ஆடுகளமோ அவருக்கு முக்கியமே இல்லாமல் இருந்து வருகிறது. தன்னுடைய தனித்துவ திறமையால் விக்கெட்டை கைப்பற்றி அசத்துகிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்திய அணி கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவிற்குடெஸ்ட் சுற்றுப்பயணம் செய்து வெற்றி பெற்று வந்திருக்கிறது. இதில் இரண்டாவது முறை டெஸ்ட் தொடரை வென்ற பொழுது முன்னணி வீரர்கள் நிறைய பேர் காயத்தாலும் தனிப்பட்ட சூழ்நிலைகளாலும் இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான நிலையில் தொடரை இந்த முறை ஆஸ்திரேலியா வெல்ல வேண்டும் என்பது எவ்வளவு நெருக்கடியாக இருக்குமோ, அதே அளவிற்கு இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை ஏற்கனவே வென்றதால் தற்போதைய இந்திய அணிக்கும் நெருக்கடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இதை செய்வேன்

தற்போது ஜஸ்பிரித் பும்ரா பேசும் பொழுது “என்னை பொருத்தவரை எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வடிவம் டெஸ்ட் கிரிக்கெட்தான். நான் இதை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் தற்பொழுது அதை நான் செய்து வருகிறேன். நம்முடைய பெல்ட்டில் வைத்து ஓவர்களை தொடர்ந்து வீச வேண்டும். மேலும் ஆஸ்திரேலியாவில் நான் கூடுதல் ஓவர்கள் வீசுவேன்”

இதையும் படிங்க : WTC வரலாறு.. முதல் பவுலராக அஸ்வின் சரித்திர சாதனை.. மேலும் 2 மெகா ரெக்கார்டுகளுக்கு வாய்ப்பு

“தற்போது கான்பூர் டெஸ்ட் மழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது ஆனால் வானிலை என்பது நம் கையில் இல்லாதது. எனவே விஷயங்களை விரைவாக செய்ய வேண்டும். நம்முடைய அனுபவத்தை பயன்படுத்த வேண்டும். நீங்கள் இந்த மாதிரி நிலைமையில் சக பவுலர்களிடம் ஆடுகளத்தின் நிலைமை, லென்த் மற்றும் லைன் குறித்து தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -