தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட், இது போன்ற ஆடுகளம் தான் தங்களுக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்திருக்கிறது.
தனிப்பட்ட கருத்து:
போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியில் துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டோசேட், “எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், ஆடுகளம் மட்டுமே வெற்றியைதீர்மானிப்பதில்லை.கொல்கத்தாவில் நாங்கள் சிறப்பாக ஆடியிருந்தால் அந்த ஆடுகளத்திலும் வெல்ல முடியும் என்று நம்புகிறேன்.”
“ஆனால் சமீபத்திய முடிவுகளைப் பார்க்கும்போது, இது போன்ற ஆடுகளங்களே எங்களுக்கு சற்று சிறப்பாக அமைகின்றன. எதிர்காலத்தில் இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு இதுபோன்ற டெம்ப்ளேட்டே பொருத்தமாக இருக்கும்.”
ஆட்டத்தில் இருக்கனும்:
“இதுபோன்ற ஆடுகளங்களில் டாஸ் மிகவும் முக்கியமாகிறது. ஆட்டம் இறுதி வரை செல்லும் என்பதால், தொடர்ந்து போராட தயாராக இருக்க வேண்டும். எப்போதும் ஆட்டத்தில் இருக்க வேண்டும்.கொல்கத்தா ஆடுகளத்துடன் ஒப்பிடுகையில் இது பெரிய மாறுபாடு. நாங்கள் இன்னும் சிறப்பான ஆடுகளத்தை எதிர்பார்த்தோம். இது கொஞ்சம் உயிரற்றதாக இருந்தது.”
இதையும் படிங்க: எங்க இங்கிலாந்து டீம் திருந்தல.. அதே 2023 தப்பு.. ஏமாற்றத்தை என்னால தாங்க முடியல – மைக்கேல் வாகன் புலம்பல்
“ஆனாலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சொன்னது போல ரன்கள் எடுப்பது கடினமாகவே இருந்தது. பழைய கால டெஸ்ட் கிரிக்கெட் போலத்தான் இருந்தது.இந்த ஆடுகளம் விரைவாக சிதறுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. முதல் இன்னிங்ஸில் இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும் வகையில் இதே நிலேயே இருக்கும் என்று நம்புகிறேன்,” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ரியான் டென் டோசேட்டின் இந்த கருத்துக்கு பதில் அளித்துள்ள ரசிகர்கள், இதை தான் நாங்கள் இவ்வளவு நாளாக சொல்கிறோம்,இப்போதாவது புரிகிறதா என்று பதிவிட்டுள்ளனர். முதல் நாள் ஆட்டம் முடிவில், குல்தீப் யாதவ் 17 ஓவர்களில் 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். மற்றொரு மூன்று பந்துவீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஸ்டம்ப்ஸ் நேரத்தில் செனுரன் முத்துசாமி 25 ரன்களுடனும், கைல் வெர்ரெய்ன் 1 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.






