பாகிஸ்தான் பிஎஸ்எல் தொடரில் வரவேற்பு வீடியோ ஒன்றை எடுக்கும் முயற்சி என்பது ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்பி தெரிவித்த கருத்து சர்ச்சையாக மாறி உள்ளது.
தற்போது பிஎஸ்எல் தொடரில் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணிக்கு தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் ஜேசன் கில்லஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவே ஆச்சரியமானதாக இருக்கிறது.
மோதலால் வெளியேறினார்
இதற்கு முன்பாக ஜேசன் கில்லஸ்பி பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டார். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரது முடிவுகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்தது.
இதன் காரணமாக பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அவர் வெளியேறினார். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து தனது அதிருப்தியை மிக வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் பயிற்சியாளர் பொறுப்புக்கு பிஎஸ்எல் தொடரில் திரும்பி இருக்கிறார்.
வரவேற்பு தேவை இல்லை
நேற்று பிஎஸ்எல் தொடரில் வரவேற்பு வீடியோ பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மைதானத்தில் மேலே நின்று இருந்த ஜேசன் கில்லஸ்பியை வீடியோவில் பங்கு பெற கீழே வருமாறு அழைக்கப்பட்டது. அதற்கு அவர் உடனடியாக மறுப்பு தெரிவித்து விட்டார்.
இதையும் படிங்க : ரிக்கி பாண்டிங் ஸ்ரேயாசுக்கு அண்ணன் மாதிரி.. அவர் கடைசி வீரருக்காக கூட இதை செய்வார் – அஸ்வின் பேச்சு
அப்போது ஜேசன் கில்லஸ்பி பேசுகையில் “எனக்கு வரவேற்பு வீடியோ எதுவும் வேண்டாம். இது மிகவும் முட்டாள்தனமானது. எனக்கு நிறைய வேலை இருக்கிறது நான் வேலை செய்யப் போகிறேன்” என்று கூறி மறுத்து விட்டார். இது தற்போது பிஎஸ்எல் தொடரில் பெரிய சர்ச்சையாக மாறி உள்ளது.






