94 வருட சாதனை.. இலங்கை அணிக்கு எதிராக.. இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் உடைத்தார்.. முதல் டெஸ்டில் ஆதிக்கம்

0
485
Smith

இங்கிலாந்து மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணிக்கு எதிராக இங்கிலாந்து டிக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித் 94 வருட இங்கிலாந்து டெஸ்ட் சாதனையை முறியடித்திருக்கிறார்.

இங்கிலாந்து இலங்கை அணிகளுக்கு இடையே இரண்டு நாட்களுக்கு முன்பாக துவங்கிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 236 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. கிறிஸ் வோக்ஸ் மற்றும் சோயப் பஷீர் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

பந்துவீச்சில் கட்டுப்பாடாக இருந்த இலங்கை

இந்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கிய இங்கிலாந்து அணி வழக்கம்போல் அதிரடியாக விளையாட முயற்சி செய்தது. ஆனால் பேட்டிங் வரிசையில் முதல் நான்கு வீரர்கள் இடம் இருந்து பெரிய ரன்கள் வராமல் இங்கிலாந்து வீரர்கள் கட்டுப்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து துணை கேப்டன் ஹாரி புரூக் அரைசதம் அடித்து வெளியேறினார்.

- Advertisement -

மேலும் நேற்று களத்தில் ஜேமி ஸ்மித் அரை சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் நின்றார். இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. எனவே இன்று மூன்றாம் நாளில் குறைந்தபட்சம் 100 ரன்கள் முன்னிலையாவது எடுக்க வேண்டிய அவசியம் இருந்தது.

ஜேமி ஸ்மித் சாதனை

முதல் டெஸ்ட் மூன்றாவது நாளில் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 358 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணிக்கு சிறப்பாக விளையாடிய ஜேமி ஸ்மித் ஒட்டு மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்து 148 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 11 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க : 6 நாட்கள் டெஸ்ட் போட்டி.. 23 வருடம் கழித்து.. இலங்கை நியூசிலாந்து அணிகள் மோதல்.. வெளியான காரணம்

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்காக மிகக் குறைந்த வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்கின்ற சாதனையை படைத்தார். தற்போது இவருக்கு 24 வயது 40 நாட்களுக்கு மேல் ஆகிறது. இவருக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1930 ஆம் வருடம் இங்கிலாந்து விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் லெஸ் அமிஸ் 24 வயது 63 நாட்களில் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜேமி ஸ்மித் 94 வருட சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -