20 வருட கிரிக்கெட் வாழ்க்கை இப்ப வலிக்குது.. இந்தியா ஆஸில அதை செஞ்சதுதான் சந்தோஷம் – ஜேம்ஸ் ஆண்டர்சன் உருக்கமான பேச்சு

0
265
Anderson

இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் என்று ஓய்வு பெற்றிருக்கிறார். இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. மேலும் தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜேம்ஸ் ஆண்டர்சன் உருக்கமாக பேசியிருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 188 போட்டிகளில் 704 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மேலும் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 50 ஆயிரம் பந்துகளுக்கு மேல் வீசி சாதனை படைத்திருக்கிறார். வேகப்பந்து வீச்சாளராக அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராகவும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார்.

- Advertisement -

ஜேம்ஸ் ஆண்டர்சன் 42 ஆவது வயதில் வேகப் பந்துவீச்சாளராக இங்கிலாந்து மாதிரியான பெரிய அணிக்கு தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டது மிகவும் பெரிய விஷயம். இந்த நிலையில் அடுத்தடுத்து பெரிய தொடர்களுக்கு அணியை மாற்ற வேண்டிய கட்டாயத்தால் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அவரை ஓய்வு பெற கேட்டுக் கொண்டதின் பேரில் அவர் ஓய்வு பெற்றிருக்கிறார்.

இன்றைய போட்டியின் வெற்றிக்குப் பிறகு பேசிய ஜேம்ஸ் ஆண்டர்சன் “இது ஒரு அற்புதமான 20 ஆண்டுகள் பயணம். இங்கிலாந்து ரசிகர்களின் ரியாக்ஷனை பார்க்கவே அருமையாக இருந்தது. இதுமிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கிலாந்து அணிக்கான ஜெர்சியை அணிந்த ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற முயற்சி செய்து உழைத்திருக்கிறேன். இந்த போட்டியில் உணர்வுகள் மேலும் கீழும் ஆக இருந்தது. போட்டிக்கான முதல் நாளில் என்னுடைய பெண்கள் பெல் அடித்தது உணர்வுபூர்வமானது.

- Advertisement -

20 வருடங்களாக கிரிக்கெட் விளையாடும் பொழுது பின்னணியில் குடும்ப ஆதரவு இல்லாமல் முடியாது. இது என்னுடையது போலவே என் குடும்பத்தினுடைய பயணமும் ஆகும்.எனக்குடெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே ஆர்வமாக இருந்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது மிகவும் சிறப்பான ஒரு அனுபவம். தற்பொழுது ஓய்வு பெறுவது வலிக்கிறது. நான் என் பொறுப்புகளில் இருந்து எப்பொழுதும் விலகியது இல்லை.

இதையும் படிங்க : 114 ரன்கள்.. அட்கின்சன் அசத்தல் பவுலிங்.. ஆண்டர்சனை மாஸாக வழியனுப்பியது இங்கிலாந்து.. வெஸ்ட் இண்டீஸ் தோல்வி

டெஸ்ட் கிரிக்கெட் என்னும் பொழுது போட்டி முடிவடையும் நிலையில் ஆறு மணிக்கு உங்கள் கேப்டன் பந்தை கையில் கொடுத்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தி தர வேண்டும். எனக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட் வடிவத்தை விட டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் சரியாக இருந்தது. மூன்று நான்கு நாட்கள் ஆட்டத்திற்கு பிறகு பெரும் திருப்தியான உணர்வு அருமையானது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -