தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டி என்பது தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் கேப்டன் கில்லிடம் களத்தில் பேசிய ஒரு சம்பவம் வைரல் ஆகி வருகிறது.
இன்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் மதியம் இந்திய நேரப்படி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வெயில் அடித்த காரணத்தினால் இந்தியா டாஸ் தோற்றது பெரிய அளவில் பாதிக்கவில்லை.
சிறப்பான தொடக்கமும் வீழ்ச்சியும்
இந்திய அணிக்கு இந்த முறை தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் களமிறங்கினார்கள். இந்த ஜோடி சரியான நிதானத்தை காட்டிய பொழுதும் மேலே இருந்த பந்துகள் எல்லாவற்றையும் பவுண்டரி அடித்து அதிரடியாக கலக்கியது.
இதன் காரணமாக முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 91 ரன்கள் கிடைத்தது. வெளியே செல்லும் ஒரு பந்துக்கு கேஎல்.ராகுல் கால் நகராத காரணத்தினால் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து வந்த சாய் சுதர்ஷன் ஏமாற்றம் அளிக்கும் வகையில் தன்னுடைய அறிமுக போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
ஜெய்ஸ்வால் செய்த சம்பவம்
இதைத்தொடர்ந்து ஜெய்ஸ்வால் உடன் கேப்டன் கில் இணைந்தார். ஒரு மனையில் கில் அதிரடியாக விளையாடி 42 பந்தில் 40 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். இன்னொரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் 65 ரன்கள் உடன் களத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க : முடிஞ்சா ரன் எடு.. நாங்க இத மாத்த மாட்டோம்.. ஸ்டோக்ஸ் வகுத்த தைரிய வியூகம்.. 10 நிமிடத்தில் ரிவார்டு வாங்கிய இங்கிலாந்து
இந்த இருவரும் சேர்ந்து விளையாடும் பொழுது ரன் ஓடுவதில் கொஞ்சம் புரிதல் இன்மை வெளிப்பட்டது. உடனே ஜெய்ஸ்வால் கேப்டன் கில்லை கூப்பிட்டு ” நான் எப்பொழுதும் பந்தை விளையாடிவிட்டு இரண்டு அடி முன்னே வருவேன். இது என்னுடைய பழக்கம். எனவே நான் ரன்னுக்காக வருகிறேன் என்று நினைக்க வேண்டாம். ரன் எடுப்பதற்கு வாய்ப்பில்லை என்றால் நீ உடனே வேண்டாம் என்று கத்தி விடு. நான் அப்படியே இருந்து விடுவேன்” என்று முன்னெச்சரிக்கையாக கூறினார். இதைத்தொடர்ந்து அடுத்த பந்தலையே கேப்டன் கில் இதை அப்படியே பின்பற்றினார். இந்த இருவரும் வெளிப்படுத்திய ஆட்ட விழிப்புணர்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






