முடிஞ்சா ரன் எடு.. நாங்க இத மாத்த மாட்டோம்.. ஸ்டோக்ஸ் வகுத்த தைரிய வியூகம்.. 10 நிமிடத்தில் ரிவார்டு வாங்கிய இங்கிலாந்து

0
607
Stokes

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தைரியமான பவுலிங் வியூகத்தை வகுத்து, முதல் செசன் முடிவதற்கு பத்து நிமிடங்கள் இருந்த பொழுது அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறது.

இங்கிலாந்து அணியின் பாஸ் பால் அணுகுமுறை என்பது அதிரடியான பேட்டிங் மட்டும் கிடையாது பவுலிங் மற்றும் பில்டிங் எல்லாமே தான் என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.

- Advertisement -

ஆடுகளம் மற்றும் கண்டிஷன் எப்படி இருக்கிறது?

இன்றைய ஆடுகளத்தில் புல் கொஞ்சமாக மட்டுமே விடப்பட்டிருந்தது. அதே நேரத்தில் மற்ற இங்கிலாந்து ஆடுகளங்களை விட கொஞ்சம் பவுன்ஸ் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் வெயில் எதிர்பார்த்ததை விட காலையில் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக டாஸ் தோற்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தாலும் பெரிய இழப்புகளை சந்திக்கவில்லை.

முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அதிரடியான அதே சமயத்தில் கிளாசிக்கான பேட்டிங்கை வெளிப்படுத்தி பவுண்டரிகள் மூலம் ரன்களை குவித்து கொண்டு வந்தார்கள். இந்திய அணி 90 ரன்கள் தாண்டிய பொழுது கேஎல்.ராகுல் 78 பந்தில் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அறிமுகப் போட்டியில் விளையாட வந்த சாய் சுதர்சன் அதிர்ச்சி அளிக்கும் விதமாக டக் அவுட் ஆனார்.

- Advertisement -

ஸ்டோக்ஸ் எடுத்த தைரிய முடிவு

இன்றைய ஆடுகளத்தில் பவுன்ஸ் கொஞ்சம் கூடுதலாக இருப்பதால் ஸ்டெம்பை தாக்கவும், அதே நேரத்தில் பந்தை ஸ்விங் செய்யவும் இங்கிலாந்து ஃபுல் லென்த்தில் மேலே பந்து வீசுவதை திட்டமாக வைத்திருந்தது. இதன் காரணமாக இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் பவுண்டரிகளாக அடித்து நொறுக்கினார்கள். இருந்த போதும் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் இந்தத் திட்டத்தில் இருந்து மாறவில்லை.

இதையும் படிங்க : 2 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்த இந்தியா.. டக் அவுட்டான சாய் சுதர்சன்.. இங்கிலாந்து அபாரம்.. கடுப்பான கம்பீர்

இதனால் இந்திய அணி 100 ரன்கள் தாண்டி முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், ஃபுல் லென்த் வியூகத்தில் தொடர்ந்து செயல்பட்ட இங்கிலாந்து, முதல் செசன் முடிய கடைசி பத்து நிமிடங்கள் இருக்க, அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி போட்டிக்குள் உள்ளே வந்திருக்கிறது. கேப்டன் ஸ்டோக்ஸ் கொண்டிருக்கும் தைரியமான விடாப்பிடியான அணுகுமுறையை கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -