ஜெய்ஸ்வால் 171 ரன்களுக்கு அவுட்… 16 ரன்களில் இமாலய ரெக்கார்ட் மிஸ்… 10 வருடங்களாக தவான் வசமிருக்கும் ரெக்கார்ட்!

0
2132

அறிமுக டெஸ்ட் போட்டியில் 171 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார் ஜெய்ஸ்வால். இதன் மூலம் 17 ரன்களில் மிகப்பெரிய ரெக்கார்ட்டை தவறவிட்டிருக்கிறார். முதலிடத்தில் தவான் இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 150 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து தன்னுடைய முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை துவங்கியது.

- Advertisement -

சுப்மன் கில் மூன்றாவது இடத்தில் களமிறகுகிறேன் என்று கேட்டுக் கொண்டதால், ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் ஓபனிங் செய்தனர். இந்த ஜோடி முதல் நாள் முடிவில் 80 ரன்கள் அடித்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கி இருவரும் அரைசதம் கடந்தனர். அதன் பிறகும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு இருநூறு ரன்களை கடந்தது. இதில் ஜெய்ஸ்வால் சதம் அடித்து பல சாதனைகளை தனது வசம் ஆக்கினார்.

தொடர்ந்து பேட்டிங் செய்து வந்த இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 229 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 103 ரன்களுக்கு அவுட் ஆனார். இருப்பினும் மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் இரண்டாம் நாள் முடிவில் 143 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

- Advertisement -

விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் களத்தில் இருந்தனர். இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்த ஜோடி துவக்கம் முதலே அதிரடியாக விளையாட வேண்டும் என்று முனைப்பு காட்டி விளையாடி வந்தது.

150 ரன்கள் கடந்த ஜெய்ஸ்வால் அறிமுக போட்டியில் 200 ரன்களை அடித்து பல சாதனைகள் படைப்பார் என்று எதிர்பார்த்து இருந்தபோது, துரதிஷ்டவசமாக 171 ரன்களுக்கு அவுட் ஆனார். இதில் 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும்.

அறிமுக டெஸ்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் லிஸ்டில் ஜெய்ஸ்வால் அடித்த 171 ரன்கள் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களே பின்வருமாறு காண்போம்.

  1. ஷிகர் தவான் – 187 ரன்கள்
  2. ரோகித் சர்மா – 177 ரன்கள்
  3. ஜெய் ஸ்வால் – 171 ரன்கள்