இன்னும் 283 ரன்.. சச்சினின் ஆல் டைம் ரெக்கார்டு.. உடைக்க காத்திருக்கும் ஜெய்ஸ்வால்.. 3 டெஸ்ட் ரேஸ்

0
133
Jaiswal

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட்டில் படைத்திருக்கும் ஆல் டைம் ரெக்கார்டை முறியடிப்பதற்கு ஜெய்ஸ்வாலுக்கு அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தற்போது இந்திய கிரிக்கெட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் இளம் வீரர்களில் சுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளி ஜெய்ஸ்வால் மிக வேகமாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய வளர்ச்சி அசாதாரணமாக இருக்கிறது. மேலும் அவர் இன்னும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஜெய்ஸ்வாலின் எழுச்சி

2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் தனது அறிமுக போட்டியிலேயே 171 ரன்கள் குவித்து அசத்தினார். அங்கிருந்து இந்திய மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு இரட்டை சதங்கள் உடன் 700க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்து பிரமிக்க வைத்தார்.

இந்த நிலையில் தற்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி ஏமாந்தார். ஆனால் இதற்கு வட்டியும் முதலுமாக கொடுக்கும் விதமாக இரண்டாவது இன்னிங்ஸில் மிகச் சிறப்பான முறையில் விளையாடி 161 ரன்கள் குவித்தார். இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்டமாக வெற்றி பெறுவதற்கு இவருடைய பேட்டிங் பங்களிப்பும் முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

சச்சினின் ஆல் டைம் ரெகார்ட்

தற்போது ஜெய்ஸ்வால் நடப்பு ஆண்டில் மூன்று சர்வதேச டெஸ்ட் போட்டிகள் இந்திய அணிக்கு எங்கே இருக்கும் நிலையில், இந்த ஆண்டில் 1280 ரன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்து ஜோ ரூட்டுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க : பங்களாதேஷ் ODI.. வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.. 2 அதிரடி மாற்றம்.. 2027 கோச் சமி திட்டம்

இதைத்தொடர்ந்து அவர் இன்னும் 283 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், ஒரு கிரிக்கெட் காலண்டர் வருடத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்திருந்த சச்சின் சாதனையை முறியடிப்பார். சச்சின் 2010 ஆம் வருடம் 14 டெஸ்ட் போட்டியில் 1562 ரன்கள் குவித்து இருந்தார். மேலும் இந்த வரிசையில் பாகிஸ்தானின் முகமது யூசுப் 2006ஆம் ஆண்டில் 11 டெஸ்ட் போட்டியில் 1788 ரன்கள் குவித்ததை சாதனையாக இருந்து வருகிறது

- Advertisement -