ஜெய்ஸ்வால் இன்னும் அந்த விஷயத்துக்கு சர்வதேச தரத்துக்கு உருவாகல.. திலக் ஓகே – இந்திய முன்னாள் வீரர் அதிரடி பேச்சு!

0
480
Jaiswal

நேற்று இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-2 என இந்திய அணி சமன் செய்திருக்கிறது!

இந்தப் போட்டியில் துவக்க வீரராக களம் வந்த இளம் வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக 51 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் நின்று அணியை வெல்ல வைத்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

- Advertisement -

தற்போதைய இந்திய அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவோடு சேர்த்து ஆறு பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். மேலும் ஜெயஸ்வால் மற்றும் திலக் வர்மா இருவரும் சுழற் பந்துவீச்சில் பகுதி நேரமாக செயல்படக்கூடியவர்கள். இவர்கள் இருவரும் எதிர்காலத்தில் சீக்கிரத்தில் பந்து வீசுவார்கள் என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள வாசிம் ஜாஃபர் ” ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா சர்வதேச அளவில் பந்து வீச தயாராகவில்லை என்று நினைக்கிறேன். திலக் கொஞ்சம் பந்து வீசுவதை பார்க்க முடிவதால் அவரால் இப்போதைக்கு முடியலாம். ஆனால் ஜெய்ஸ்வால் இன்னும் காத்திருக்க வேண்டும்.

அவர்களைத் தொடர்ந்து வலைகளில் அதிகம் பந்து வீச ஊக்கப்படுத்த வேண்டும். மேலும் அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்பும் பொழுது அவர்கள் பந்து வீசுவதை நம்மால் பார்க்க முடியும். இந்தியாவின் பேட்டிங் வரிசையில் இருந்து யாராவது பகுதி நேரமாக பந்து வீசாதது பிரச்சினையாக இருக்கிறது. எனவே இவர்களை அதை நோக்கி உருவாக்குவது நல்ல விஷயம்.

- Advertisement -

2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பொழுது இந்திய அணிக்கு பேட்டிங் வரிசையில் இருந்து பந்து வீசக்கூடிய பலர் இருந்தார்கள். எனவே இவர்களை பந்துவீச்சில் சீர்படுத்துவதில் எந்தத் தீங்கும் கிடையாது. ஜெய்ஸ்வால் லெக் ஸ்பின் வீசுவார் என்று எனக்குத் தெரியும். ஆனால் அது சர்வதேச தரத்தில் இல்லை என்று நான் கூறுவேன்.

திலக் வர்மாவை ஒரு ஒழுக்கமான ஆப் ஸ்பின்னராக நம்மால் வளர்க்க முடியும். எதிரணியில் பல இடது கை ஆட்டக்காரர்கள் இருந்தால், இவரிடமிருந்து நம்மால் ஒன்று இரண்டு ஓவர்களை வாங்கிக் கொள்ள முடியும். அவர் பந்து வீச தயாராக இருக்கிறார் என்று நினைக்கிறேன். இவர் கைகளில் பந்து தர ஹர்திக் பாண்டியா எப்பொழுது நம்பிக்கை உடன் இருப்பார் என்று பார்க்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!