ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் ரேங்கிங்.. வெறும் 8 போட்டிகள்.. சாதித்த இளம்புயல் ஜெய்ஸ்வால்

0
163
Jaiswal

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக, சுனில் கவாஸ்கர் இந்த தொடருக்குப் பிறகு ஜெய்ஸ்வால் பெரிய உயர்த்திற்கு சென்று இருப்பார் எனக் கூறியிருந்தார்.

சுனில் கவாஸ்கர் கூறியபடியே இந்தத் தொடர் முடிவதற்குள்ளாகவே ஜெய்ஸ்வால் தற்போதைய இந்திய கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத வீரர் என்கின்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

- Advertisement -

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகள் முடிவடைந்து இருக்கின்ற நிலையில், ஜெய்ஸ்வால் இரண்டு இரட்டை சதங்கள் மற்றும் இரண்டு அரை சதங்கள் எடுத்து மொத்தம் 655 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் அவர் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கிடுகிடுவென்று உயரத்தை எட்டி இருக்கிறார். இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக அவர் 69வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததற்கு பிறகாக அவர் 29ஆவது இடத்தில் இருந்தார். இதற்கு அடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ராஜ்கோட்டில் இரட்டை சதம் மீண்டும் அடித்ததற்கு பிறகு 15ஆவது இடத்திற்கு முன்னேறி வந்தார். இதற்கு அடுத்து தொடர்ந்து 12வது இடத்தை பெற்றார்.

- Advertisement -

நான்காவது டெஸ்ட் போட்டியில் 73 மற்றும் 37 ரன்கள் எடுக்க, ஜெய் ஸ்வால் முதல் முறையாக ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் பத்தாவது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறார். விராட் கோலி மட்டுமே முதல் 10 இடங்களில் இருந்து வந்தார். தற்பொழுது ஜெய்ஸ்வாலும் இதற்குள் இணைந்து இருக்கிறார்.

மொத்தம் எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் ஜெய்ஸ்வால் அதற்குள்ளாகவே ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பத்தாவது இடத்தை தொட்டுவிட்டார். இன்னும் அவர் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் பொழுது பெரிய உயரங்களை அடைவார்.

இதையும் படிங்க : 5வது டெஸ்ட்.. தரம்சலாவில் உடைய வாய்ப்பிருக்கிற 4 மெகா லெஜன்ட் சாதனைகள்.. இந்திய தரப்பில் இரண்டு

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை முதல் 11 வீரர்கள் பட்டியல் :

கேன் வில்லியம்சன் – 870
ஜோ ரூட் – 799
ஸ்டீவ் ஸ்மித் – 789
டேரில் மிட்செல் – 771
பாபர் அசாம் – 768
உஸ்மான் கவாஜா – 755
திமுத் கருணாரத்ன – 750
விராட் கோலி – 744
ஹாரி புரூக் – 743
யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 727
ரோஹித் சர்மா – 720