இந்திய கிரிக்கெட்

ஸ்டார்க் கிட்ட நான் பேச காரணம் ஹர்ஷித் ராணா இல்ல.. களத்தில் இதுதான் நடந்தது – ஜெய்ஸ்வால் பேட்டி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களத்தில் தான் பேட்டிங் செய்யும்பொழுது தனக்கும் ஸ்டார்க்குக்கும் இடையில் என்ன பேச்சு வார்த்தை நடந்தது என்பது குறித்து ஜெய்ஸ்வால் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது பெர்த் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதம் அடித்து 161 ரன்கள் குவித்து இந்திய அணி முன்னிலை பெற முக்கிய காரணமாக இருக்கிறார்.

தானாக பரவிய வதந்தி

ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய பொழுது ஹர்ஷித் ராணா வீசிய பந்து ஸ்டார்க் ஹெல்மெட்டை தாக்கியது. அப்போது அவரிடம் ஹர்ஷித் ராணா அடி ஏதும் பட்டதா என்று கேட்டார். அதற்கு ஸ்டார்க் நான் உன்னை விட பந்து வீசுவேன் எனக்கு அது ஞாபகம் இருக்கிறது என்று பதில் சொன்னார். இது நகைச்சுவையாக நடந்தது.

இந்த நிலையில் ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது ஸ்டார்க்கிடம் உங்கள் பந்து எனக்குமிகவும் மெதுவாக வருகிறது என்று கூறினார். ஹர்ஷித் ராணாவிடம் ஸ்டார்க் அப்படி கூறியதற்காகவே திருப்பி ஜெய்ஸ்வால் பதிலடி கொடுத்தார் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. தற்போது இது குறித்து ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்திருக்கிறார்.

- Advertisement -

உண்மையில் இதுதான் நடந்தது

இதுகுறித்து ஜெய்ஸ்வால் கூறும் பொழுது ” உண்மையில் எனக்கு ஸ்டார்க்கு பந்து வீசும் பொழுது பந்து மெதுவாக வந்ததாக நான் உணர்ந்தேன். இதன் காரணமாகவே நான் அவரிடம் உங்கள் பந்து மெதுவாக வருகிறது என்று கூறினேன். மற்றபடி வேறு எந்த காரணத்திற்காகவும் நான் அவரிடம் அப்படி சொல்லவில்லை”

இதையும் படிங்க : மாஸ் காட்டிய சிஎஸ்கே.. 1 ஆர்டிஎம்.. 4 வீரர்கள்.. அஸ்வின் வரை தட்டி தூக்கி.. மாஸ்டர் பிளான்

“உண்மையில் நான் அவரை எதிர்த்து விளையாடும் உணர்வை அனுபவித்தேன். அவர் ஆரம்பத்தில் பந்து வீசும் பொழுது நான் குழந்தையாக இருந்து அதை பார்த்துக் கொண்டிருந்தேன். எனவே அவருக்கு எதிராக விளையாடுவதை நான் ரசித்து விளையாடினேன். மேலும் அவர் பந்தை மிகவும் வேகமாக வீசினார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: JaiswalStarc

Recent Posts