இந்திய கிரிக்கெட்

நான் பெரிய சிக்ஸ் அடிக்க காரணம் அவர்தான்.. எனக்கு இந்த ஒரு ஆசை ரொம்ப நாளா இருக்கு – ஜெய்ஸ்வால் பேட்டி

இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் ஜெய்ஸ்வால் தன்னால் எப்படி பெரிய சிக்ஸர்கள் அடிக்க முடிகிறது என்றும் இதற்கு பின்னால் யார் உதவியிருக்கிறார்கள்? என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது முதல் முறையாக ஜெய்ஸ்வால் இந்திய ஒரு நாள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு விளையாடும் அணியில் இடம் கிடைக்குமா? என்பது குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை. இடம் கிடைக்கும் பட்சத்தில் சாதிக்கக் கூடிய திறமையுடன் நம்பிக்கை தரக்கூடிய வீரராக இருக்கிறார்.

ஜெய்ஸ்வால் சிக்ஸர் சாதனை

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் தொடரில் மொத்தம் 19 சிக்ஸர்கள் அடித்தது சாதனை படைத்தார். ஜெய்ஸ்வால் 2024 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தம் 26 சிக்ஸர்கள் அடித்து அந்த சாதனையை உடைத்தார். மேலும் கடந்த ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக சாதனையும் படைத்திருக்கிறார்.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சூழலில் இருந்து மும்பை வந்து இன்று இந்திய பேட்டிங் யூனிட்டின் எதிர்கால நட்சத்திர வீரராக மாறி இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய வளர்ச்சிக்கு பின்னாலும், தான் பெரிய ஷாட் அடிப்பதற்கு பின்னாலும் யார் பெரிய உதவி செய்திருக்கிறார்கள்
என்பது குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இவர்தான் முக்கிய காரணம்

இதுகுறித்து ஜெய்ஸ்வால் பேசும்பொழுது “நான் சிக்ஸர்கள் அடிப்பதை மேம்படுத்த எனக்கு ஐபிஎல் பெரிதும் உதவியது. குறிப்பாக ஜூபின் பருச்சா சார் சில வருடங்களாக எனக்கு கிரிக்கெட்டில் பல வகைகளில் உதவியாக இருந்து வந்திருக்கிறார். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர்கள் எனக்கு ஒரு நல்ல அமைப்பை கொடுத்திருக்கிறார்கள். நான் சென்று அங்கு நான் நல்ல முறையில் தயாராக முடியும். என் வளர்ச்சிக்கு பின்னால் பலர் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும்”

இதையும் படிங்க : இங்க எப்படி நான் அதை பேச முடியும்?.. பிரஸ் மீட்டில் கோபப்பட்ட ரோகித் சர்மா.. நடந்தது என்ன?

“தற்போது ஒருநாள் அணியில் இடம் கிடைத்திருக்கிறது மேற்கொண்டு என்ன நடக்கும்? என்று தெரியவில்லை ஆனால் நான் உற்சாகமாக இருக்கிறேன். ஒருநாள் அணியில் அங்கமாக இருக்க நான் எப்பொழுதும் விரும்புகிறேன். தற்பொழுது நான் இருக்கும் படியே இருக்கப் போகிறேன். எனக்கு முன்னால் எது வந்தாலும் அதை நான் செய்ய தயாராக இருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts