ஹேசில்வுட் அதை செய்வார் என்று எனக்கு தெரியும்.. கேஎல் ராகுல் இந்த உதவிய செஞ்சார் – சதம் பற்றி ஜெய்ஸ்வால் பேட்டி

0
433
Jaiswal

ஆஸ்திரேலியா மண்ணில் முதல் சர்வதேச சதத்தை அடித்தது தனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது எனவும் கேஎல்.ராகுல் தன்னை களத்தில் மிகவும் சிறப்பாக வழி நடத்தினார் எனவும் ஜெய்ஸ்வால் கூறியிருக்கிறார்.

தற்போது பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய மண்ணில் அவருக்கு முதல் சர்வதேச சதமாக இது அமைந்தது.

- Advertisement -

கேஎல் ராகுல் வழிநடத்தினார்

இதுகுறித்து ஜெய்ஸ்வால் பேசும் பொழுது “களத்தில் நான் பேட்டிங் செய்யும்பொழுது கே.எல். ராகுல் என்னை மிகச் சிறப்பான முறையில் வழி நடத்தினார். நான் அடித்த எல்லா சதங்களுமே எனக்கு ஆச்சரியமானது. ஆனாலும் இந்த சதம் எனக்கு சிறப்பானதாக இருக்கும். ஏனென்றால் நான் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செய்ய வேண்டும் என்று விரும்பினேன். இங்கே பந்து பவுன்ஸ் ஆகும் என எங்களுக்கு தெரியும். எனவே நான் இதற்கு தயாராகி விட்டேன்”

“மேலும் நான் 90 ரன் தாண்டி சதம் அடிப்பதற்கு அருகில் இருந்த பொழுது, ஹேசில்வுட் எனக்கு பவுன்சர் வீசுவார் என்று நன்றாகவே தெரிந்திருந்தது. இதற்கு நான் தயாராகவே இருந்தேன். எனவே அவர் பவுன்சர் வீசியதும் அதை எனக்குப் பின்பக்கமாக சிக்சர் அடிக்க வசதியாக இருந்தது. நான் சதத்தையும் எட்டினேன்”

- Advertisement -

நான் இப்படித்தான் விளையாடுவேன்

“நான் பேட்டிங் செய்ய களத்திற்கு சென்று பயமின்றி ரசித்து விளையாட போகிறேன். களத்தில் தைரியமான முடிவுகளை எடுப்பேன். என் அணிக்கு என்ன தேவையோ நான் அதை செய்வேன். இவ்வளவு பெரிய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது ஆச்சரியமானதாகத்தான் இருக்கிறது”

இதையும் படிங்க : ரோகித் கம்பீர் எனக்கு செஞ்ச அந்த வேலை.. மோசமான வெறுப்பா இருந்தது.. இவர் உதவினார் – கேஎல் ராகுல் கருத்து

“இன்று நான் விராட் பாயுடன் இணைந்து விளையாடிக் கொண்டிருந்தேன். இது மிகவும் சிறப்பான ஒரு தருணமாக இருந்தது. மூத்த வீரர்களுடன் பேசி என்னுடைய ஆட்டத்தில் ஏதாவது சிறந்ததை சேர்த்துக் கொண்டு வளர்வதற்கு நான் முயற்சி செய்கிறேன்.நான் இன்னும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -