இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய தற்காலிக தொடக்க ஆட்டக்காரர் கேஎல்.ராகுல்தான் விளையாடுவதற்கு சிறந்த தொடக்க இடம் என்றும் விளையாடாமல் வெளியில் இருப்பது வெறுப்பாக இருந்தது எனவும் கூறி இருக்கிறார்.
இந்தியாவில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேஎல்.ராகுல் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவருடைய இடத்தில் இளம் வீரர் சர்ப்ராஸ் கான் விளையாட வைக்கப்பட்டார். ஏறக்குறைய கேஎல்.ராகுல் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாகவே பல கிரிக்கெட் வல்லுனர்களும் கூறினார்கள்.
எல்லாவற்றையும் மாற்றிய பெர்த் டெஸ்ட்
இந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் தன்னுடைய தனிப்பட்ட காரணங்களால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடவில்லை. இதனால் கேஎல்.ராகுலுக்கு துவக்க வீரராக விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதைச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட ராகுல் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே நல்ல பேட்டிங் வெளிப்படுத்தினார். ஒரு அரை சதத்தையும் எடுத்தார்.
இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் அணிக்குள் வந்து இணைந்து விட்டதால் கேஎல்.ராகுலுக்கு தொடர்ந்து தொடக்க இடம் கிடைக்குமா? என்கின்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இப்படியான நிலையில் தான் அவர் மனம் திறந்து தன்னுடைய விருப்பம் மற்றும் சிரமம் குறித்து பேசி இருக்கிறார்.
எனக்கு சிறந்த இடம் ஓபனிங்தான்
இதுகுறித்து கேஎல்.ராகுல் கூறும் பொழுது “நான் தொடக்க இடத்தில் விளையாட விரும்புகிறேன். விளையாடாமல் வெளியில் சும்மா அமர்ந்திருப்பதை வெறுக்கிறேன். எனக்கு நடுவில் கிடைத்த ஓய்வில் நான் மிகக் கடினமாக உழைத்தேன். நான் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடாத இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக்சர்மாவுடன் இணைந்து கடினமாக பயிற்சி செய்தேன்”
இதையும் படிங்க : சிஎஸ்கேவுக்கு இதனால கடன் பட்டிருக்கேன்.. ரசிகர்கள் எனக்காக சேப்பாக்கில் கத்தவே இல்ல – அஸ்வின் பேட்டி
“நீங்கள் விளையாடாமல் இருக்கும் பொழுது உங்களை உற்சாகமாக வைத்திருப்பது கடினம். ஆனால் எனக்கு இதற்கு அபிஷேக் நாயர் மிகவும் உதவி செய்தார். அவர் என்னைத் தொடர்ந்து ஊக்குவித்தார். தற்போது நான் கடினமாக உழைத்து இங்கு வந்து ரன்கள் பெறும் பொழுது, நான் சரியான பாதையில் செல்வது புரிகிறது. தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்”






