நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மழையின் காரணமாக 11 ஓவராக நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ஜெய்ஸ்வால் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் ஆட்டம் இழக்காமல் 32 பந்தல் 77 ரன்கள், வைபவ் சூரியவன்சி 14 பந்துகளில் 5 சிக்ஸர்கள் உடன் 39 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 11 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பும்ரா ஓவரை அடிக்க சொன்னேன்
இந்த போட்டியில் தீபக் சகர் ஓவரை ஜெய்ஸ்வால் வெளுத்து கட்டினார். இதற்கு அடுத்து வந்த பும்ரா ஓவரில் இரண்டு சித்தர் உடன் வைபவ் சூரியவன்சி வெளுத்து கட்டினார். இருவரும் அதிவேகத்தில் ரன்ரேட்டை எடுத்துச் சென்றார்கள்.
இது குறித்து ஜெய்ஸ்வால் பேசும் பொழுது ” பவர் பிளேவில் மூன்று ஓவர்கள் மட்டுமே இருந்தது. எனவே எந்த பவுலரை யார் பார்க்கலாம் என்று யோசிப்பேன். நான் தீபக் சகரை எடுத்துக் கொண்டேன். பும்ரா பாய் வந்ததும் வைபவ் சூனியவன்சிடம் அவரை தாக்கி விளையாட சொன்னேன். அந்த நேரத்தில் முழுமையாக யோசித்து ஆட்டத்தில் கவனம் செலுத்தி கொண்டு இருந்தேன்”
சூரியவன்சி இப்படித்தான்
“வைபவ் சூரியவன்சி விளையாடும் விதம் அருமையாக இருக்கிறது. அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். இதனால் நானும் ஊக்கமடைகிறேன். நாங்கள் எப்படி முன்னேறி செல்லலாம் என தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்போம். அவர் அதிரடியாக விளையாடும் போது நான் பாசிட்டிவாக பேசுவேன்”
இதையும் படிங்க : 15 வயசு பையனை பத்தி யோசிக்காம வந்திருப்போமா.? அவன் அத்தனையும் அடிச்சு நொறுக்கிட்டான் – மும்பை கேப்டன் வியப்பு
“நான் வழிநடத்துகின்ற காரணத்தினால் அவர் சிறப்பாக விளையாடுகிறார் என்று கிடையாது. அவர் ஆட்டத்தை நன்றாக புரிந்து கொள்கிறார். அவர் தானாகவே சிறப்பாக விளையாடக்கூடியவர். அவர் தனது ஆட்டத்தை மகிழ்ச்சியாக அனுபவித்து அற்புதமாக விளையாடக் கூடியவர்” என்று கூறி இருக்கிறார்.






