முதல்ல நானே சின்ன பையன்தான்.. இந்த சூரியவன்சையால எனக்கு ஒரே பிரச்சனை – ஜெய்ஸ்வால் பேட்டி

0
20
Jaiswal

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜெய்ஸ்வால் 27 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் அவர் போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 222 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சூரியவன்சி அதிரடியாக 16 பந்துகளில் 43 ரன்கள், ஜெய்ஸ்வால் 27 பந்தில் 51 ரன்கள் எடுத்து சிறந்த துவக்கத்தை ஏற்படுத்தியது வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

- Advertisement -

சீனியர் வீரர் ஆனார்

தற்போது ஜெய்ஸ்வாலுக்கு 24 வயதாகிறது. பொதுவாக கிரிக்கெட்டில் அவர் இளம் வீரராக அறியப்பட வேண்டியவர். ஆனால் அவர் ராஜஸ்தான் அணிக்கு 15 வயதான சூரியவன்சியுடன் விளையாடுவதால் சீனியர் வீரராக தெரிகிறார். மேலும் அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டு களத்தில் அவரை வழிநடத்தவும் செய்கிறார்.

ஜெய்ஸ்வால் எந்தவித சுயநலமும் இல்லாமல் சூரியவன்சி களத்தில் இருக்கும் வரையில் அவர் அடித்து விளையாடுவதற்கு அதிக பந்துகளை கொடுக்கிறார். அவர் ஆட்டம் இழந்த பிறகுதான் இவர் அதிரடியாக விளையாட ஆரம்பிக்கிறார்.

- Advertisement -

நானே இளம் வீரன்தான்

இதுகுறித்து ஜெய்ஸ்வால் பேசும்போது “சூரியவன்சியுடன் பேட்டிங் செய்வதை நான் மிகவும் ரசிக்கிறேன். நிச்சயமாக அது மிகவும் அருமையாக இருக்கிறது. அவர் அருமையாக பந்தை அடித்து விளையாடுகிறார். எதிர்முனையில் இருந்து அவர் அப்படி அடித்து விளையாடுவதை பார்க்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”

இதையும் படிங்க : சூரியவன்சி திறமை லாராவுக்கு இருந்திருந்தா சந்தோஷப்பட்டு இருப்பார்.. இந்த பையன் உள்ளுக்குள்ள யாரையும் மதிக்கிறது இல்லை – முரளி கார்த்திக் பேட்டி

“நான் சீனியர் வீரராக நினைத்து அவருடன் விளையாடவில்லை. ஏனென்றால் நானே இளம் வீரன்தான். நான் அவரை விட வயதில் பெரியவனாக இருந்தாலும் இளமையானவன். இதை எப்படி சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -