வங்கதேசம் அணியுடனான தொடரில் ஜடேஜா விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாற்று வீரராக சூரியகுமார் யாதவ் நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
டி20 உலக கோப்பை முடித்துவிட்டு இந்தியா அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. முதல் கட்டமாக டி20 தொடர் முடிந்திருக்கிறது. இதை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. அடுத்ததாக ஒரு நாள் தொடர் நடக்கவிருக்கிறது. இத்தொடர் முடிந்த பிறகு இந்திய அணி வங்கதேசம் செல்கிறது.
அங்கு சென்று மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடரில் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்று இருக்கிறார்.
டி20 உலக கோப்பைக்கு முன்பு காயம் காரணமாக விலகிய ஜடேஜா, சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் குணமடைவது சற்று சிக்கலாகி உள்ளது. இன்னும் சில காலம் எடுக்கும் என்றும் மருத்துவ குழுவினரால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆகையால் இவரால் வங்கதேச தொடரில் இடம்பெற முடியாது என தெரியவந்துள்ளது. ஜடேஜாவிற்கு மாற்றாக இருக்கும் அக்சர் பட்டேல் ஏற்கனவே அணியில் இடம்பெற்று இருக்கிறார்.
வேறொரு புதிய வீரரை சேர்க்க இந்திய அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இந்த இடத்தில் சூரியகுமார் யாதவை சேர்க்கலாம் என்ற பேச்சுக்கள் அடிப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அது உறுதியாக விட்டது என்றே கூறலாம்.
கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சூரியகுமார் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. தற்போது சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். அவருக்கு வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் அதை அவர் நன்றாக பயன்படுத்த நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
டி20 போட்டிகளில் நேரடியாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவ், டெஸ்ட் போட்டிகளிலும் நன்றாக விளையாடக் கூடியவர் என்று ரவி சாஸ்திரி உட்பட பலர் கருத்து தெரிவித்தனர். தற்போது அது நிறைவேறிடும் என தெரிகிறது.
சூரியகுமார் யாதவிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தால், டெஸ்ட் போட்டிகளில் அவர் எவ்வாறு செயல்படுவார் என்பதை பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் இருக்கின்றன.