ஸ்டீவ் ஸ்மித், லபுஜானே ரெண்டு பேரின் விக்கெட்டை எடுக்க திட்டமிட்டு எடுத்தேன் – ஜடேஜா பேட்டி!

0
262

ஸ்மித் மற்றும் லபுஜானே இருவருக்கும் பிளான் வச்சு தான் விக்கெட் எடுத்தேன் என்று ஜடேஜா பேட்டி அளித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணியை 177 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. இதில் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

குறிப்பாக உலகின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 பேட்ஸ்மேன்களாக டெஸ்ட் தரவரிசையில் இருந்து வரும் மார்னஸ் லபுஜானே மற்றும் ஸ்மித் இருவரின் விக்கெட்டையும் ஜடேஜா எடுத்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு வந்த வீரர்களின் விக்கெட்டுகளையும் வரிசையாக வீழ்த்தி குறைந்த ஸ்கோருக்குள் ஆஸ்திரேலியா அணியை கட்டுப்படுத்த முடிந்தது.

லபுஜானே மற்றும் ஸ்மித் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தது. இவர்களை இப்படியே விட்டிருந்தால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை பெரிய அளவிற்கு எடுத்துச் சென்றிருப்பார்கள். சரியான நேரத்தில் திட்டமிட்டு ஜடேஜா வீழ்த்தியுள்ளார்.

மேலும் இந்த இன்னிங்ஸில் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது பற்றி இன்னிங்ஸ் முடிந்த பிறகு ஜடேஜாவை அழைத்து எடுக்கப்பட்ட பேட்டியில், ஸ்மித் மற்றும் ஜடேஜா இருவருக்கும் லபுஜானே இருவருக்கும் என்ன திட்டங்கள் இருந்தது? எப்படி அவர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினீர்கள்? என்றும் கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஜடேஜா கூறுகையில்,

- Advertisement -

“இருவரும் தரமான டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் அதிக டாட் பந்துகள் விளையாட விடாமல் ரன்களை எடுத்துக்கொண்டே இருப்பார்கள். இந்த மைதானத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பந்து சுழலவில்லை. இவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் நிறைய டாட் பந்துகள் விளையாட வைத்து அழுத்தம் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினேன்.

அத்துடன் பந்தை ஸ்டம்பிற்கு வெளியேவும் உள்ளேவும் மாறிமாறி வீசி பேட்ஸ்மன்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டேன். அந்த குழப்பத்தில் தான் லபுஜானே இறங்கி அடிக்க முயற்சித்து ஸ்டம்பிங் ஆனார். அடுத்ததாக ஸ்மித் ஆடியபோது, பந்து டர்ன் ஆகிறதா இல்லையா என்கிற குழப்பத்தின் விளையாடி அவுட் ஆனார். என்னுடைய திட்டம் மிகவும் அடிப்படையானது. பேட்ஸ்மேன்களை குழப்பி விக்கெட் எடுக்கவேண்டும் அவ்வளவுதான்.” என்று பேசினார்.