ஜடேஜாவும் காயம்? நாளை போட்டியில் விளையாடுவாரா?.. – பிசிசிஐ அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்!

0
1101
Jadeja

இந்திய அணி நேற்று முன்தினம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் எளிமையாக வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தன்னுடைய முதல் ஓவரை வீசும் போது எதிர்பாராத விதமாக காயமடைந்தார். இதன் காரணமாக அவர் நாளை நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

மேலும் ஹர்திக் பாண்டியா 29ஆம் தேதி லக்னோவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடக்க இருக்கும் போட்டியில் விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்பொழுது ஹர்திக் பாண்டியா இடத்திற்கு யாரை கொண்டு வருவது என்பது இந்திய அணி நிர்வாகத்திற்கு பெரிய சிக்கல் ஆன விஷயமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் இன்னொரு முக்கிய ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் காயத்தால் பாதிக்கப்பட்டிருக்கிற விஷயம் தெரிந்திருக்கிறது. அவருக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முழங்காலில் காயம் மீண்டும் வந்துள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது முழங்காலில் ஐஸ் பேக் வைத்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். ஒரே நேரத்தில் அணியின் இரண்டு முக்கிய ஆல்ரவுண்டர்களும் காயம் அடைந்திருப்பது இந்திய அணிக்கு பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பிசிசிஐ அதிகாரி தெரிவிக்கும் பொழுது ” ஜடேஜா தற்பொழுது நலமாக இருக்கிறார். உங்களுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யும்பொழுது அதற்கு தொடர்ச்சியான கண்காணிப்பு தேவை. எனவே காயங்கள் மீண்டும் வலிக்கும். அதற்காகத்தான் அவர் ஐஸ் பேக்கை பயன்படுத்தினார்.

அவரது நிக்கில் குறித்து இப்பொழுது பெரிதாக கவலைப்பட வேண்டியது கிடையாது. பிசிசிஐ மருத்துவக் குழு மற்றும் பிசியோக்கள் ஜடேஜா மற்றும் எல்லா வீரர்களையும் கண்காணித்துக் கொண்டு வருகிறார்கள்.

அணி வீரர்களை சுழற்றி பயன்படுத்த வேண்டுமா என்பதை அணி நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும். முக்கியமான போட்டிகள் வருகின்ற காரணத்தினால் ஜடேஜா எங்களுக்கு முக்கியமான வீரர். ஒருவேளை அரை இறுதி வாய்ப்பு உறுதியானதும் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம். அவர்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்கலாம்!” என்று கூறியிருக்கிறார்!