ஆஸ்திரேலியாவை அனாயசமாக சுழலில் சுருட்டி எறிந்த ஜடேஜா அஷ்வின் கூட்டணி!

0
1671

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று துவங்கியது . இந்தப் போட்டியில் தாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்தே இந்திய அணியின் கையே ஓங்கி இருந்தது . இரண்டாவது ஓவரின் முதல் பந்தை வீசிய முகம்மது சிராஜ் ,உஸ்மான் கவஜாவின் விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தி இந்திய அணிக்கு அருமையான துவக்கத்தை கொடுத்தார் . அடுத்த ஓவரை வீசிய முகமது சமி நேர்த்தியான இன் சுவிங்கரின் மூலம் டேவிட் வார்னரின் ஸ்டம்புகளை சிதறச் செய்தார் . இரண்டு ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி தடுமாறிக் கொண்டிருந்தது .

- Advertisement -

அந்த நேரத்தில் ஆஸ்திரேலியா அணியின் நம்பிக்கை ஜோடியான ஸ்டீபன் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுசேன் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர் . சிறப்பான தடுப்பாட்டத்துடன் அவ்வப்போது பந்துகளை பௌண்டரிகளுக்கு விரட்டினர் . இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களும் அதிகமான ரண்களை விட்டுக் கொடுக்காமல் நல்ல அளவில் விசி ரன்களை கட்டுப்படுத்தினர் . உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 76 ரன்களை எடுத்து இருந்தது .

உணவு இடைவேளைக்குப் பின் துவங்கிய ஆட்டத்தில் இந்தியா அணி சிறப்பாக பந்து வீசி அடுத்தடுத்து விக்கெட் களை வீழ்த்தியது . குறிப்பாக இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மிகச் சிறப்பாக பந்து வீசினார் . அவர் நன்றாக ஆடிக் கொண்டிருந்த லபுசேன் விக்கெட்டை அருமையான ஒரு பந்தின் மூலம் வீழ்த்தினார். மேலும் அதே ஓவரிலேயே மேத்யூ ரன்சாவின் விக்கெட்டையும் வீழ்த்தி இந்தியா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் . நன்றாக ஆடிக் கொண்டிருந்த லபுசேன் 49 ரண்களில் ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆனார் .

ஸ்டீவன் ஸ்மித் மற்றும் பீட்டர் ஹண்ட்ஸ்காம்டன் இணைந்து ஆஸ்திரேலியா அணியை சரிவிலிருந்து மீட்டுக் கொண்டு வரப் போராடினார். 37 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீவன் ஸ்மித் விக்கெட்டை கிளின் போல்ட் முறையில் ஆட்டமிளக்கச் செய்து தனது மூன்றாவது வீக்கெட்டை கைப்பற்றினார் ஜடேஜா . மறுமுனையில் ரவிச்சந்திரன் அஸ்வினும் சிறப்பாக பந்து வீசி அலெக்ஸ் கேரி மற்றும் பேட் கம்மின்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார் இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்களை நிறைவு செய்தார் அஸ்வின் . இந்த சாதனையை 89 போட்டிகளில் படைத்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் விக்கெட்டுகள் ஜடேஜாவின் சுழலை சமாளிக்க முடியாமல் சீட்டுக் கட்டு போல சரிந்தன . தேநீர் இடைவேளையின் போது 176 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இருந்த ஆஸ்திரேலியா அணி . தேநீர் இடைவேளைக்குப் பின் தனது ஒன்பதாவது விக்கெட்டையும் இழந்தது . இந்த விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களை கைப்பற்றினார் . இது டெஸ்ட் போட்டிகளில் ஐந்து விக்கெட்களுக்கு மேல் வீழ்த்துவது பதினொன்றாவது முறையாகும் . தொடர்ந்து ரன்கள் எடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இறுதி விக்கெட் ரவிச்சந்திரன் அஸ்வின் கிளீன் போல்ட் மூலம் கைப்பற்றி ஆஸ்திரேலியா அணியின் இன்னிசை முடித்து வைத்தார் .

இந்திய அணியின் தரப்பில் ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளையும் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினார் . முகமது சமீ மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினார் .