தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி தங்களுடைய ஐசிசி உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் எளிதாக வெல்லும் நிலையில் இருந்து இந்திய அணி இடம் தோற்று கோப்பையை கோட்டை விட்டது. தற்பொழுது இது தொடர்பாக அந்த அணியின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் பேசியிருக்கிறார்.
அந்த டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் கைவசம் இருக்க 30 பந்துகளுக்கு 30 ரன்கள் தேவை என்கின்ற நிலை இருந்தது. எனவே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி புதிய சரித்திரத்தை படைக்கப் போகிறது என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வரை நினைத்திருந்தார்கள்.
இந்த இடத்தில் இருந்து இறுதியாக ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடையும் அளவுக்கு தென் ஆப்பிரிக்கா மோசமாக விளையாடிவிட்டது. அதே சமயத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக கடைசி ஐந்து ஓவர்களில் செயல்பட்டார்கள். 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உலகக் கோப்பை தொடரை இந்தியா வென்றது. அதே சமயத்தில் உலகக் கோப்பை தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணியின் சோகமும் தொடர்ந்தது.
தற்பொழுது இதுகுறித்து பேசி இருக்கும் ஜாக் காலிஸ் கூறும்பொழுது “இது எங்களுக்கு ஒரு நல்ல மாதம் அதே சமயத்தில் ஒரு மோசமான மாதம். நாங்கள் உலகக் கோப்பையை வென்றிருந்தால் எங்களுக்கு சிறப்பான ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் எங்களுடைய வீரர்கள் தொடர் முழுவதும் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார்கள். வேறு எந்த தென்னாபிரிக்க அணியை விடவும் சிறப்பான நிலையை எட்டினார்கள். எனவே அவர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள் அவர்கள் செயல் திறனை பாராட்டலாம்.
ஒருவேளை அந்தப் போட்டியை தென் ஆப்பிரிக்கா திரும்பி பார்த்தால் கோட்டைவிட்டு விட்டதாக நினைக்கும். ஏனென்றால் அந்த நிலையில் இருந்தால் 20 க்கு 19 முறை தென் ஆப்பிரிக்கா வென்று இருக்கும். துரதிஷ்டவசமாக அந்த தோல்வியடையும் ஒரு போட்டியாக அது அமைந்துவிட்டது.
இதையும் படிங்க : ரெய்னா அந்த விஷயத்தில் என்னை கைவிட்டார்.. ஆனால் தோனி செஞ்சது வேற லெவல் சம்பவம் – அஸ்வின் சுவாரசிய தகவல்
சூரியகுமார் இப்படித்த கேட்ச் போல பெரிய போட்டிகளில் குறிப்பிட்ட நாளில் நீங்கள் முன்னேறி வர உங்களுக்கு அதெல்லாம் தேவை. மேலும் அப்படியான போட்டிகளில் வெற்றி பெற உங்களுக்கு நிறைய நட்சத்திரங்களும் தேவை. மற்றபடி இறுதிப் போட்டியை தவிர தென் ஆப்பிரிக்கா மிகச் சிறப்பாக செயல்பட்டது. துரதிஷ்டவசமாக எங்களுக்கு சில நல்ல விஷயங்கள் நடக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.