பெரிய ஸ்கோர் இருந்தா விராட் கோலி அதிரடியா ஆடுவாரா?.. ஆர்சிபில வீக்னஸ் கண்டுபிடிச்சி இருக்கேன் – ஜேக்கப் டப்பி கருத்து

0
0

​நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி வெற்றி தேடித்தந்த விராட் கோலியின் பேட்டிங் அணுகுமுறை குறித்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி பேசியுள்ளார்.

​இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 74 ரன்கள் குவித்த விராட் கோலி குறித்து ஜேக்கப் டஃபி பேசுகையில், ” இந்தியா முதலில் பேட்டிங் செய்தாலோ அல்லது ஸ்கோர் போர்டில் பெரிய இலக்கு இருந்தாலோ விராட் கோலி இதேபோல விளையாடுவாரா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அவர் அப்படி விளையாடுவாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆர்சிபி அணியில் நெட்ஸில் பந்துவீசியபோது எனக்கு சில தகவல்கள் கிடைத்தன”

- Advertisement -

“​ஆனால் அந்த மனிதரின் கேமில் பெரிய தவறுகள் எதுவும் இல்லை. இதுபோன்ற சிறிய கிரவுண்டில் அவர் பேஸ் நன்றாகப் பயன்படுத்துகிறார். இதுபோன்ற சிறிய டார்கெட் இருக்கும்போது, ஒரு வீரர் இந்த மாதிரியான இன்டென்ட் உடன் களமிறங்கினால், அது இலக்கை மிக எளிதாக மாற்றிவிடும். அதைச் செய்வதற்கு அவர் மிகவும் சிறந்த ஒரு வீரர்”

“​இது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அவர் பவுன்ஸ் பந்துகளை எதிர்கொள்ள சிரமப்படவில்லை, ஹூக் ஷாட் மற்றும் புல் ஷாட் ஆகியவற்றைச் சரியாக ஆடினார், மேலும் கிரவுண்டில் டவுன் தி டிராக் இறங்கியும் ஆட முடிந்தது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் ஒரு சிறந்த பிளேயர், பல ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறார். பெங்களூரு நெட்ஸிலும் அவர் எனக்கு எதிராக இதைச் செய்துள்ளார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​

- Advertisement -