INDvsENG.. இங்கிலாந்து நட்சத்திர வீரர் மொத்தமாக டெஸ்ட் தொடரில் இருந்து ரூல்ட் அவுட்

0
243
England

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகள் முடிவடைந்து இருக்கிறது.

முடிவடைந்த இரண்டு போட்டிகளிலும் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் தற்போது சமநிலையில் உள்ளது.

- Advertisement -

மேற்கொண்டு மூன்று போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் பிப்ரவரி 13ஆம் தேதி துவங்குகிறது.

பொதுவாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகத்திற்கு பிறகு இந்தியாவில் சுழல் பந்துவீச்சுக்கு மிகவும் ஒத்துழைக்கும் ஆடுகளங்கள் அமைக்கப்பட்டன. இதன் காரணமாக இந்தியா வரும் வெளிநாட்டு அணிகள் மிகவும் தடுமாற்றத்தை சந்தித்தனர்.

எனவே இங்கிலாந்து அணியின் இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்திலும் இப்படியான ஆடுகளங்களே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு போட்டிக்கான ஆடுகளங்களும் அப்படி இல்லை என்பதுதான் உண்மை.

- Advertisement -

இந்த நிலையில் இங்கிலாந்து தனது சுழல் பந்துவீச்சு படையில் மொத்தம் நான்கு வீரர்களை சேர்த்து அழைத்து வந்திருந்தது. இதில் ஜாக் ரிலீஸ் மட்டுமே அனுபவ சுழற் பந்துவீச்சாளர். மற்றும் மூவரும் அனுபவம் மிக மிகக் குறைவான இளம் வீரர்கள்.

இந்தச் சூழ்நிலையில் காயத்திற்கு பிறகு வெகு நாட்கள் கழித்து அணிக்குள் வந்த ஜாக் லீச் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் மீண்டும் காயத்தால் விளையாடாமல் இருந்தார்.

இதையும் படிங்க : AUSvsWI.. 218 ஸ்ட்ரைக்ரேட்.. மேக்ஸ்வெல் மின்னல் வேக சதம்.. ரோகித் சூர்யா ரெக்கார்ட் சமன்

தொடர்ந்து அவரது காயம் குணமடையாத காரணத்தினால் தற்பொழுது மொத்தமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். ஏற்கனவே இங்கிலாந்து அணியில் அனுபவ சுழல் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இருந்த நிலையில், ஜாக் லீச் விலகி இருப்பது பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது.