“டெல்லியில் கோஹ்லி எளிதாக வெளியேறி சதம் அடிப்பார் என்று நான் கூறவில்லை” – ஆனால் அவரிடம் இருந்து ஒரு சிறப்பான ஆட்டம் காத்திருக்கிறது” – ஆகாஷ் சோப்ரா கணிப்பு!

0
129

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது . இந்தப் போட்டிக்காக இரண்டு அணி வீரர்களும் மும்முறமாக தயாராகி வருகின்றனர் .

இந்திய அணியை பொறுத்தவரை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ரோஹித் சர்மா மட்டுமே முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்தார். கே எல் ராகுல் புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் சொற்பரன்களில் ஆட்டம் இழந்தனர் . இதனால் நாளைய போட்டியில் இந்திய அணியின் டாப் பார்டர் பேட்ஸ்மேன்களின் மீது கிரிக்கெட் விமர்சகர்களின் பார்வை உள்ளது .

- Advertisement -

கடந்த சில தொடர்களாகவே விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருகிறார் . பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சொற்பரன்களில் ஆட்டம் இழந்தார் . இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அவர் மீண்டு வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் 12 ரன்கள் துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்தார் . நாளை நடைபெறும் டெஸ்ட் போட்டி அவரது சொந்த ஊரான டெல்லியில் நடப்பதால் நிச்சயமாக விராட் கோலி சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது . இறுதியாக டெல்லியில் அவர் ஆடிய டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

விராட் கோலியின் பார்ம் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ள இந்தியா அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா” முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக விராட் கோலி நிறைய ஸ்வீப் சாட்டுகளை பயிற்சி செய்தார் ஆனால் துரதிஷ்டவசமாக ஒரு இன்னிங்ஸில் மட்டுமே அவர் பேட்டிங் ஆட முடிந்தது . டெல்லியில் அவர் எப்படி பேட்டிங் ஆடுவார் என்று சொல்வது கடினம் . மேலும் 6 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் டெஸ்ட் போட்டி நடப்பதால் ஆடுகளம் எப்படி இருக்கும் என்று தெரியாது ” என கூறினார் .

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் சிறப்பாக இருக்கும் . ஏனென்றால் குறைந்தபட்சம் அவர்கள் இரண்டு இன்னிங்ஸ் ஆடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் . மற்ற நாட்களை ஒப்பிடும்போது டெல்லி ஆடுகளத்தில் முதல் நாள் பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும் என்றே நினைக்கிறேன் . அதற்காக விராட் கோலி எளிதாக சதம் அடிப்பார் என்று கூறவில்லை . ஆனால் நிச்சயமாக அவரிடம் இருந்து ஒரு சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் எனக் கூறி முடித்தார் ஆகாஷ் சோப்ரா .

- Advertisement -

இதுவரை தனது சொந்த ஊரான டெல்லியில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் விராட் கோலி ஒரு இரட்டை சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் உட்பட 467 ரன்களை எடுத்துள்ளார் . இந்த மைதானத்தில் அவரது சராசரி 77.83 ஆகும் .. கடைசியாக டெல்லியில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .