பாப் டு பிளிசிஸ் என் மேல வைச்ச நம்பிக்கையை நான் கான்வே மேல வைச்சிருக்கிறேன் – ருதுராஜ் பேச்சு!

0
1150
Ruturaj

நேற்று பதினோராவது ஐபிஎல் சீசனில் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான தகுதி சுற்று போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்கார ருதுராஜ் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்தார்.

- Advertisement -

ருத்ராஜ் 44 பந்துகளை சந்தித்து ஏழு பவுண்டரி ஒரு சிக்ஸர் உடன் 60 ரன்கள் எடுத்தார். மேலும் தனது கூட்டாளி கான்வே உடன் பத்து ஓவர்களை தாண்டி களத்தில் நின்றார்.

இந்த ஆட்டத்தில் மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் கான்வே 34 பந்துகளில் 4 பவுண்டரி உடன் 40 ரன்கள் எடுத்தார். பேட்டிங் செய்வதற்கு கடினமான ஆடுகளத்தில் சென்னை அணியின் துவக்க ஜோடியின் செயல்பாடு அவர்களை இறுதிப் போட்டிக்குள் கொண்டு சென்று இருக்கிறது.

போட்டிக்கு பின் பேசிய ருத்ராஜ் கூறும்பொழுது ” 2021 ஆம் ஆண்டு பாப் டு பிளிசிஸ் என் மேல் நம்பிக்கை வைத்தது போல, டெவோன் கான்வே நீண்ட நேரம் களத்தில் இருந்து விளையாடுவார் என்ற நம்பிக்கை அவர் மீது எனக்கு இருக்கிறது!” என்று தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

மேலும் ருத்ராஜ் உடன் உரையாடிய தீபக் சகர் ” இந்த ஐபிஎல் தொடரில் சொந்த மைதானத்திலும் வெளியிலும் விளையாடியது எப்படி இருந்தது?” என்ற கேள்வியை முன் வைத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய ருத்ராஜ்
” நான் இந்த முறை வெளியில் விளையாடியதாகவே உணரவில்லை. ஏனென்றால் மகி பாய்க்காக எல்லா மைதானங்களிலும் சென்னை அணிக்கான ஆதரவு பலமாக இருந்தது!” என்று கூறியிருக்கிறார்!