இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன்சியை ஜோ ரூட்டிடம் இருந்து வாங்குவதைத் பற்றி பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட பதில்

0
655
England Captain Joe Root and Ben Stokes

இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியா சென்று ஆஷஸ் தொடரில் பங்கேற்று வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் உள்ளன. இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஷஸ் கோப்பையை வெல்ல முடியாது தவித்து வருகிறது இங்கிலாந்து அணி. மேலும் அந்த அணியின் தோல்விகளை விட அதிகமாக விமர்சிக்கப்படுவது எதுவென்றால் அந்த அணியின் மோசமான பேட்டிங். தற்போதைய கேப்டன் ஜோ ரூட் தவிர வேறு யாரும் பொறுப்பாக விளையாடுவதாக தெரியவில்லை. தனியாளாக ரூட் 1700 க்கும் அதிகமான ரன்கள் எடுத்த போதிலும் மற்ற வீரர்கள் யாரும் ஆடாததால் வரிசையாக தோல்வியை அந்த அணி சந்தித்து வருகிறது.

இதன் காரணமாக இங்கிலாந்து அணி கேப்டன் சரியில்லை என்றும் அவரை மாற்ற வேண்டும் என்றும் பல கண்டன குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ரசிகர்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்ள தேவையில்லை என்றாலும் இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் கூட இதே கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் கேப்டனை மாற்றிவிட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கு செய்தது போல முற்றிலுமாக அணியை மாற்றி அமைக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். ஒருவேளை ஜோ ரூட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் அடுத்த கேப்டனாக பொறுப்பேற்ற முதல் இடத்தில் இருப்பவர் அந்த அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.

- Advertisement -

ஆனால் பென் ஸ்டோக்ஸ் தற்போது வேறு விதமாக பேசியுள்ளார். தனக்கு எப்போதுமே கேப்டன் பதவியில் மீது விருப்பம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். புதிய கேப்டனை சேமிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை ரூட் தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். மேலும் ரூட் தானாக முன்வந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவரை யாரும் கட்டாயப்படுத்தி கேப்டன் பதவியில் இருந்து வெளியேறச் சொல்ல கூடாது என்றும் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கு செய்தது போல அணியை முற்றிலுமாக மாற்றியமைத்து மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துமா இங்கிலாந்து என ரசிகர்கள் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.