இனி சூரியகுமார் யாதவ் டீம்ல இருக்கணுமா? அந்த இடத்திற்கு சஞ்சு சாம்சன் தான் வரவேண்டுமா? – பக்காவாக பதிலை சொன்ன கபில் தேவ்!

0
2549

தொடர்ச்சியான சொதப்பல்களுக்கு பிறகு சூரியகுமார் யாதவ் ஓடிஐ அணியில் இருக்க வேண்டுமா? இந்த இடத்திற்கு சஞ்சு சாம்சன் வரவேண்டும் என்று சொல்வது சரியா? ஆகிய கேள்விகளுக்கு கபில் தேவ் பதில் கொடுத்திருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகினார். அந்த இடத்திற்கு சூரியகுமார் யாதவ் விளையாட வைக்கப்பட்டார். வரலாறு காணாத வகையில் மூன்று போட்டிகளிலும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பேரதிர்ச்சியை கொடுத்தார்.

- Advertisement -

இதனால் அடுத்தடுத்த தொடர்களுக்கு அவர் இருக்கக் கூடாது. நன்றாக விளையாடி வந்த சஞ்சு சாம்சனுக்கு அந்த வாய்ப்பை கொடுக்க வேண்டும். அதுதான் சரியாக இருக்கும் என்று பலரும் ஒப்பீட்டு அளவில் விமர்சனத்தை முன்வைத்தனர். இது குறித்து ரோகித் சர்மா பேசுகையில், “இந்த சொதப்பல்களுக்காக திறமையான வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய வாய்ப்பை உடனடியாக நிறுத்தி விட முடியாது. இன்னும் சில போட்டிகள் அவருக்கு வாய்ப்புகள் கொடுத்தாக வேண்டும்.” என்று பேசினார். அதன்பின்னும் இந்த விமர்சனங்கள் அடங்கவில்லை.

இந்நிலையில் சூரியகுமார் யாதவ் பற்றி கபில் தேவ் சமீபத்தில் கருத்து தெரிவித்தது பல விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இருக்கிறது. சூரியகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் குறித்து கருத்து தெரிவித்த கபில் தேவ், “சிறப்பாக விளையாடும் வீரருக்கு கூடுதலான வாய்ப்புகள் கொடுக்கப்படுவது வழக்கம். சஞ்சு சாம்சன் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரையும் ஒப்பிட்டு பேசக்கூடாது. அது தவறு அடுத்தடுத்த தொடர்களில் சஞ்சு சாம்சன் மோசமாக விளையாடினால் அதன் பிறகு அவரைப் பற்றி பேசுவோம். இது சரியானது அல்ல. அணி நிர்வாகம் சூரியகுமார் யாதவை நம்புகிறது. அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கிறது. நீங்களும் நானும் நிறைய பேசலாம். ஆனால் பணி நிர்வாகம் எடுக்கும் முடியை இறுதியானதாக இருக்கும்.” என்றார்.

- Advertisement -