இந்த இந்திய வீரருக்கு எதிராக பந்து வீசுவது தான் கடினம் – ஹசன் அலி கருத்து!

0
1626
Hasan Ali

இந்த முறை நடக்க இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பங்கேற்கும் நாடுகளின் ரசிகர்களை தாண்டி உலக கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. காரணம் இந்தத் தொடரில் குறைந்த பட்சம் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் இரண்டு முறை மோதிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இறுதிப் போட்டிக்கு முன்பான சுற்றில் இரண்டு அணிகளும் சிறப்பாக செயல்பட்டால், மூன்றாவது முறையும் மோதிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது!

தற்போது இந்தியா பாகிஸ்தான் பல முன்னாள் வீரர்கள் இடையே ஆசிய கோப்பை குறித்தான கணிப்புகளும் விவாதங்களும் சூடு பிடித்துள்ளன. இந்திய அணி மிகச் சிறப்பான முன் தயாரிப்பில் ஈடுபட்டு ஒரு வலுவான அணியை உருவாக்கி ஆசிய கோப்பை பெற்றுக் கொண்டு சென்றிருக்கிறது. தற்போது ஆசிய கோப்பையில் பங்குபெறும் அணிகளில் இந்திய அணியை சற்று மற்றவர்களைவிட வலிமையானதாக இருக்கிறது.

- Advertisement -

2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தி இருந்தது. அப்போது அந்த அணியில் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இடம்பெற்ற அசன் அலி அப்போது இருந்து பாகிஸ்தான் அணியில் ஒரு நிரந்தர வீரராக இருந்து வந்தார். ஆனால் தற்போது அவரின் பார்ம் மோசமாக இருப்பதால், அவருக்கு பாகிஸ்தான் தேர்வுக்குழு ஓய்வு அளித்துள்ளது. அவர் மீண்டும் சிறப்பாக திரும்பி வர பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஐசிசி க்கு அளித்த பேட்டி ஒன்றில் அசன் அலி சில முக்கிய மலரும் நினைவுகளைப் பகிர்ந்து இருக்கிறார். இதில் அவரிடம் யாருக்கு பந்து வீசுவது மிக கடினமாக இருந்தது என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ரோகித் சர்மா தான் என்று பதிலளித்தார்.

2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் ரோகித்சர்மா 9 ஆட்டங்களில் 5 சதங்களை அடித்திருந்தார். அதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் ஒரு பெரிய சதத்தை விளாசி இருந்தார். அந்தப் போட்டியில் அசன் அலி ரோகித் சர்மாவை வீழ்த்தி இருந்தாலும், அதற்கு முன்பே பாகிஸ்தான் அணிக்கு ஒரு பெரிய சேதாரத்தை ரோகித் சர்மா உருவாக்கிவிட்டார். அந்த போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி எண்பத்தி ஒன்பது ரன்களில் வெற்றி பெற்றது.

- Advertisement -

தற்போது இந்தப் போட்டியை நினைவுகூர்ந்து அசன் அலி பேசினார். அவர் கூறும் பொழுது ” ரோகித் சர்மா 2019 உலக கோப்பையில் சதம் அடித்து விட்டார். அப்பொழுது எனக்கு தோன்றியது, ‘ அதுதான் சதமடித்து விட்டீர்களே! இன்னும் உங்களுக்கு என்னதான் வேண்டும்’ என்று நினைப்பேன். பின்பு அவர் ஆட்டமிழந்தார். ஆனால் அதுவரை அவரை எப்படி வீழ்த்துவது என்றுதான் நான் யோசித்துக்கொண்டே இருந்தேன். ரோகித் சர்மாவை வீழ்த்தி வெளியேற்றுவது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை மிகவும் கடினமான காரியம்” என்று தெரிவித்து இருக்கிறார்!