மிட்சல் ஸ்டார்க் பந்தை ஆடறது பெரிய கஷ்டம் இல்ல இவ்வளவுதான் – ஜாகீர் கான் சொன்ன ஈஸியான வழி!

0
207
Zaheer Khan

ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில், இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் மிக முக்கியமான வீரராக ஆஸ்திரேலியா அணிக்கு இருப்பார் என்று நம்பப்பட்டது!

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில், சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளத்தில், வந்து சேர்ந்த பின் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் எஸ்ஜி பந்தில் இதில் கைதேர்ந்தவரான ஸ்டார்க் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று இரு அணியிலும் நம்பிக்கை காணப்பட்டது.

- Advertisement -

ஆனால் விரலில் ஏற்பட்ட காயத்தால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவரால் விளையாட முடியவில்லை. மேலும் காயம் குணமாகி வந்ததும் அவரால் உடனடியாக சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்த நிலையில் அவரது டெஸ்ட் போட்டி பந்துவீச்சு பெரிய அளவில் இல்லை.

இதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து தற்பொழுது நடந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கும் இந்திய அணிக்கும் சேர்த்து திருப்பி தந்திருக்கிறார்.

முதல் ஒருநாள் போட்டியில் 9.5 ஓவர்கள் பந்துவீசி 49 ரன்கள் விட்டு தந்து சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் என மூன்று விக்கெட்டுகளை தூக்கி அசத்தினார். இதில் சூரிய குமாரை முதல் பந்திலேயே கோல்டன் டக் அடிக்க வைத்தார்.

- Advertisement -

இதற்கடுத்து இரண்டாவது போட்டியில் அவரது பந்து வீச்சு இன்னும் விஸ்வரூபம் எடுத்தது. எட்டு ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டன் செய்து ஐந்து விக்கட்டுகளை அள்ளி ஆஸ்திரேலியா அணிக்கு ஒரு எளிமையான வெற்றியை பரிசளித்தார். இந்த முறையும் அவர் சூரியகுமாரை முதல் பந்திலேயே தூக்கி கோல்டன் டக் அடிக்க வைத்தார்.

தற்பொழுது மிட்சல் ஸ்டார்க் பந்துவீச்சு பார்ம் இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் மிக வெற்றிகரமான இடது கை வேகப்பந்துவீச்சாளரான ஜாகிர் கான் ஸ்டார்க் பந்துவீச்சை எப்படி அணுக வேண்டும் என்று ஒரு எளிமையான வழியை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசும் பொழுது
“மிட்சல் ஸ்டார்க் பவுலிங் பார்மை நாம் எப்படி அணுகுவது? நீங்கள் ஒரு டெஸ்ட் போட்டியை அணுகுவது போல அணுக வேண்டும். இந்தப் பொறுப்பை முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் எடுத்துக் கொண்டு, ஆட்டத்தில் அவர் முதலில் பந்து வீசக்கூடிய 10, 12 ஓவர்களை விளையாடி முடிக்க வேண்டும். இந்த வழியில் விளையாடி தீர்வை கண்டறிவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” மேலும் இது அழுத்தங்களை உள் வாங்குவது மற்றும் தீர்வுகளை கொண்டு வருவது பற்றியது. நேரம் குறைவாக உள்ளது என்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் பதில்களை கொண்டு வந்துதான் ஆக வேண்டும். பந்துவீச்சாளர் சிறப்பான நிலையில் இருக்கிறார், அவர் உங்கள் மீது தனது சிறப்பான தாக்குதல்களை செய்ய இருக்கிறார். எனவே நீங்கள் பதில்களை கண்டறிந்தே ஆக வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!