எங்க ஏரியாவில் சம்பவம் செய்தது மகிழ்ச்சி”…. ஆஸ்திரேலியா அணிக்கு மிஸ்ட் காத்திருக்கிறது – சூசகமாக தெரிவித்த சுப்மண் கில்

0
204

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 289 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது விராட் கோலி 59 ரன்களுடனும் ரவீந்திர ஜடேஜா 16 ரங்களுடனும் களத்தில் உள்ளனர்.

மூன்றாம் நாள் ஆட்டத்தை 36 ரன்கள் உடன் துவக்கிய இந்திய அணி இன்றைய நாள் ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங்கை வழங்கியது. குறிப்பாக இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மண் கில் மிகச் சிறப்பாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.

- Advertisement -

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே சுப்மண் கில்லை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்களும் முன்னால் வீரர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் இந்திய அணி நிர்வாகம் கே எல் ராகுலுக்கு முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு வழங்கியது . ஆனால் அவர் அந்த இரண்டு வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தாமல் சொற்பரன்களில் ஆட்டம் இழந்து நிர்வாகம் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை பொய்ப்பித்தார். இதன் காரணமாக இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இடையே களம் இறங்கினார் கில். ஆனால் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அதிலும் குறிப்பாக இரண்டாவது இன்னிங்சில் அவர் ஆட்டம் இழந்த விதம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது . பொறுப்பற்ற வகையில் அவர் விளையாடி தனது விக்கெட்டை விட்டுக் கொடுத்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் அவர் மீது விமர்சனத்தை வைத்தனர். இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் விமர்சனங்களுக்கு பதில் அளித்திருக்கிறார் கில். இந்த வருட துவக்கத்திலிருந்து அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் கில் இந்த சதத்தின் மூலம் ஒரு டெஸ்ட் போட்டி அணியிலும் தனது இடத்தை பலப்படுத்தி கொண்டார்.

238 பந்துகளில் 128 ரன்கள் எடுத்த கில் நேதன் லியான் பந்துவீச்சில் lpw முறையில் ஆட்டம் இழந்தார். இதில் 12 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடக்கம். மிகச் சிறப்பாக ஆடிய அவர் இரட்டை சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் துரதிஷ்டவசமாக 128 ரண்களில் ஆட்டம் இழந்தார். இந்நிலையில் போட்டிக்கு பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார் சுப்மண் கில்.

- Advertisement -

அப்போது பேசிய அவர் ” என்னுடைய ஐபிஎல் ஹோம் கிரவுண்டில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தது மகிழ்ச்சியான தருணம். இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு ஏற்ற வகையில் மிகவும் அருமையாக இருந்தது. ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு பந்துகள் திரும்புவது வீரர்களின் ரன் அப் மூலம் சேதமடைந்திருக்கும் கரடு முரடான பகுதிகளில் இருந்து தான் ஏற்படுகின்றன. மற்றபடி ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. நான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு ரன்கள் எடுத்து ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து கொண்டு இருக்கவே விரும்பினேன் . முழுவதுமான நேர்மறையான சிந்தனையுடன் ஆட்டத்தை அணுகி சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது. அணி தற்போது 300 ரன்கள் நெருங்கிவிட்டது. ஆனால் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருக்கிறோம். நாளை முழுவதும் பேக் செய்து அதிகமான ரன்களை எடுத்து ஐந்தாவது நாளில் ஆஸ்திரேலியா அணியை ஆல் அவுட் ஆக முயற்சி செய்வோம். ஒருவேளை ஐந்தாவது நாள் ஆடுகளம் நம் பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் இருக்கலாம் எனக் கூறி முடித்தார்.