“மேக்ஸ்வெல் ஓவரில் ருதுராஜ் 30 ரன் அடிச்சது நல்லதுதான்.. எனக்கு நம்பிக்கையே இல்ல!” – ஆஸி கேப்டன் வித்தியாசமான பேச்சு!

0
1504
Wade

இன்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில், வாழ்வா சாவா ஆட்டத்தில், இந்திய அணியை மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி எதிர்கொண்டது. ஏனென்றால் முதல் இரண்டு போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்திருந்தது.

இதன் காரணமாக இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க வேண்டும் என்கின்ற நெருக்கடியில் ஆஸ்திரேலியா அணி இருந்தது. இதனால் அவர்கள் அணியில் இன்று நான்கு மாற்றங்கள் இருந்தது.

- Advertisement -

டாஸ் ஜெயித்து பந்துவீச்சை தேர்ந்தெடுத்து ஆரம்பத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா இறுதிக் கட்டத்தில் ரன்களை வாரி வழங்கியது. ருத்ராஜ் 57 பந்தில் 123 ரன்கள் குவித்தார். இந்திய அணி 222 ரன்கள் என்று பெரிய ஸ்கோரை எட்டியது.

இந்த போட்டியில் மிக முக்கியமாக மேக்ஸ்வெல் கடைசி ஓவரை எதிர்பாராத விதமாக வந்து வீசி 30 ரன்கள் தந்தார். இது ஆட்டத்தில் பெரிய திருப்பு முனையை அப்பொழுது உண்டாக்கியது. இதற்கான காரணம் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

மீண்டும் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கிய பொழுது, மேக்ஸ்வெல் அபாரமாக சதம் அடித்தும், கேப்டன் மேத்யூ வேட் 16 பந்தில் முக்கியமான 28 ரன்கள் எடுக்கவும், ஆஸ்திரேலியா கடைசி பந்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் கூறும் பொழுது “எல்லாம் கடினமான வேலையாக இருந்தது. கேன் ரிச்சர்ட்ஸன் காயம் அடைந்ததால் கடைசி ஓவரை மேக்ஸ்வெல் வீச வேண்டியதாக இருந்தது. இன்று மேக்ஸ்வெல் அபாரமாக விளையாடினார். தனது நூறாவது சர்வதேச டி20 போட்டியில் 100 ரன்கள் அடித்தது சிறப்பு.

நான் இந்த போட்டியில் நம்பிக்கையுடன் இருந்தேன் என்று சொல்ல மாட்டேன். ஆட்டத்தின் நடுப்பகுதியில் விளையாட வந்த பொழுது எரிச்சலாக இருந்தது. நாங்கள் 19வது ஓவரில் 190 ரன்கள் இருந்தோம் என்று நினைக்கிறேன். ஏறக்குறைய கடைசி ஓவர் 30 ரன்கள் சென்றது.

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் மேக்ஸ்வெல் பந்து வீசி 30 ரன்கள் தராமல் இருந்திருந்தால், இன்று அவரால் சதம் அடிக்க முடியாமல் போயிருக்கும்.எங்கள் அணி வீரர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். அடுத்து ஒரு போட்டியை வென்று தொடரை சமன் செய்து, இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும்!” என்று நினைக்கிறோம் என்று கூறியிருக்கிறார்!