“இது அதிர்ச்சிகரமான ஆடுகளம்!” – ஹர்திக் பாண்டியா விமர்சன பேட்டி!

0
1268
Hardikpandya

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்து, தற்பொழுது டி20 தொடரில் இந்திய அணி உடன் மோதி வருகிறது!

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருக்க இன்று இரண்டாவது போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற நியூசிலாந்த அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது!

- Advertisement -

லக்னோ மைதான ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு தாறுமாறாக ஒத்துழைத்தது. இந்த காரணத்தால் நியூஸிலாந்து அணியால் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்த எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியால் ஒரு பந்து மீதம் இருக்கும் பொழுது தான் வெல்லவும் முடிந்தது. இந்த போட்டியில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கப்படவில்லை. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் அணிகள் மோதிய ஆட்டத்தில் 30 ஓவர்கள் சுழற் பந்துவீச்சு இந்த ஆட்டத்தில்தான் வீசப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

வெற்றிக்குப் பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா
” நாங்கள் ஆட்டத்தை முடிப்போம் என்று நான் உறுதியாக நம்பினேன். இந்த ஆட்டம் இறுதிவரை சென்றது. ஆனால் இப்படியான ஆடுகளத்தில் இப்படித்தான் போகும். இது மாதிரியான போட்டிகளில் விளையாடும் பொழுது பதட்டம் அடையக் கூடாது. நாங்கள் விளையாடும் பொழுது ரிஸ்க் எடுப்பதற்கு பதிலாக ஸ்ட்ரைக்கை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டோம்” என்று கூறினார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” இந்த ஆடுகளம் ஒரு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ஆனால் நாம் நம்மிடம் நல்ல ஆடுகளங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இங்கு 120 ரன்கள் இருந்திருந்தால் கூட அது வெற்றியாக இருந்திருக்கும். நாங்கள் எங்கள் திட்டத்தை கடைபிடித்தோம். விக்கட்டுகள் தொடர்ந்து விழுந்ததால் அவர்கள் ஸ்ட்ரைக் செய்ய மாட்டார்கள் என்று உறுதி செய்தோம். இங்கு பனிப்பொழிவு இல்லை. அவர்கள் எங்களை விட பந்தை நன்றாக சுழற்றுகிறார்கள். இது விக்கெட்டில் அதிர்ச்சியாக இருந்தது மேலும் பந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் பறந்தது” என்று கூறியிருக்கிறார்!