கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“கில் இதுக்காகத்தான் காத்திருக்கார் போல.. அது மும்பையில் நடக்கலாம்!” – கவாஸ்கர் அதிரடியான கணிப்பு!

13 வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மூன்று துறைகளிலும் மிகச் சிறப்பாக விளங்கி வருகிறது. இதன் எதிரொலியாக இந்திய அணி லீக் சுற்றில் 9 ஆட்டங்களையும் தொடர்ச்சியாக வென்று அசத்தியிருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களில் நான்கு பேட்ஸ்மேன்கள் சதம் அடித்திருக்கிறார்கள். இதில் சதம் அடிக்காத பேட்ஸ்மேனாக சுப்மன் கில் மட்டுமே இருந்து வருகிறார்.

உலகக் கோப்பைக்கு முன்பு பயிற்சிகள் இருந்த பொழுது டெங்கு காய்ச்சல் தாக்கியதால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாத கில், இதற்கு அடுத்து மிக முக்கியமான பாகிஸ்தான் போட்டிக்கு காய்ச்சலை தாண்டி சீக்கிரத்தில் வந்து களமிறங்கினார்.

அவரிடம் இருந்து 50 ரன்கள் வருகின்றன ஆனால் அவை சதங்களாக மாறுவதில்லை. இன்று அரைஇறுதி நடக்க இருக்கும் இதே மும்பையில் இலங்கைக்கு எதிராக 90 ரன்களை தொட்ட அவர் சதத்தை எட்ட முடியாமல் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்த வருடம் ஒரு நாள் கிரிக்கெட்டில் மட்டும் 1500 ரன்களை தாண்டிய பேட்ஸ்மேனாக இருக்கிறார். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 1500 ரன்கள் ஒரே ஆண்டில் தாண்டியது சச்சின் டெண்டுல்கர் மட்டும்தான். அவர் 1800 ரன்களை தாண்டி இருக்கிறார். இப்படி ஒரு சாதனையையும் உடைக்க கில்லுக்கு வாய்ப்பு இருந்தது.

டெங்கு காய்ச்சல் காரணமாக அவரது ஆரம்ப உடல் தகுதியிலும் பிரச்சனை உருவாக, இந்த அரிய சாதனையை உடைப்பதற்கான வாய்ப்பு தற்போது அவருக்கு கொஞ்சம் குறைவாக மாறி இருக்கிறது.

கில் குறித்து பேசி உள்ள கவாஸ்கர் கூறும் பொழுது ” பெரும்பாலும் பேட்டிங்கின் சொர்க்கமாக விளங்கும் வான்கடே மைதானத்தில், இந்தியா முதல் இல்லை இரண்டாவது எப்படி பேட்டிங் செய்தாலும், கில் சிறப்பான தொடக்கத்தை பெறுவார். அப்போது அவர் சதம் அடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் ஐம்பது ரன்களில் வெளியேறுகிறார் இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் அவருக்கு சதம் அடிப்பதற்கான பசி எப்பொழுதோ வந்துவிட்டது. அவர் இதே வருடத்தில் ஐந்து சதங்கள் அடித்து இருக்கிறார். ஒருவேளை அவர் தன்னுடைய சிறந்ததை உலகக் கோப்பையின் கடைசியில் கொடுப்பதற்காக சேமித்திருக்கலாம்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -
Published by