“இப்படியா பண்றது?.. வயசு 23தான்.. ரோகித் சர்மாவை பார்த்து கத்துக்கோ!” – கில் மீது விமர்சனம் வைத்த வீரேந்திர சேவாக்!

0
19368
Gill

இந்திய அணி இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு மிகவும் நல்ல விதமாக தயாராகி நம்பிக்கையான அணியாக தெரிகிறது!

ஆசியக் கோப்பைக்கு வீரர்கள் காயத்திலிருந்து திரும்பி எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியாமல் அரைகுறையான நம்பிக்கையில் சென்ற இந்திய அணி, மிகச்சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியாவில் ஆஸ்திரேலியா அணியை சந்தித்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளுக்கு முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

மேலும் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் தற்பொழுது கைப்பற்றி விட்டது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர்கள் பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. முதல் போட்டியில் அரைசதம் அடித்த அவர் இரண்டாவது போட்டியில் சதம் அடித்தார்.

தற்பொழுது சதம் அடித்த கில் மீது சேவாக் ஒரு விமர்சனத்தை முன் வைக்கும் பொழுது “கடந்த முறை அவர் சதத்தை தவறவிட்டார். ஆனால் இந்த முறை சதத்தை பெறுவதை உறுதி செய்தார். ஆனால் அவர் இருக்கும் பார்முக்கு 160, 180 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். அவருடைய வயது எப்பொழுது ஒரு 25 தான். இந்த வயதில்தான் 200 ரன்களுக்கு போக முடியும். 30 வயதை எட்டும் பொழுது களைப்பாகிவிடும். பெரிய ரன்களை இப்போது எடுப்பதுதான் நல்லது.

- Advertisement -

நீங்கள் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருந்து ரன்களை குவித்துக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் விக்கெட்டை தூக்கி எறியாதிர்கள். அவர் அவுட் ஆன பொழுது ஆட்டத்தில் 18 ஓவர்கள் இருந்தன. அவர் அடுத்த ஒன்பது, பத்து ஓவர்கள் விளையாடி இருந்தால், அவரால் தன்னுடைய இரண்டாவது இரட்டை சதத்தை அடித்திருக்க முடியும்.

ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்கள் அடித்திருக்கிறார். கில்லுக்கு இன்றைய நாளில் அந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த மைதானத்தில் வேறு ஒருவர் 200 ரன்கள் அடித்திருக்கிறார் அவர் பெயர் சேவாக். இந்த டிராக் அந்த மாதிரியானது!” என்று கூறியிருக்கிறார்!