நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி முடிவுக்கு பிறகு ரோகித் சர்மா குறித்து இந்திய பயிற்சியாளர் ரியான் டென் டஸ்கேட் தெரிவித்த கருத்துக்கு மனோஜ் திவாரி கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடரில் இருந்து ரோஹித் சர்மா பேட்டிங் ஃபார்ம் நல்ல நிலையில் இருந்து வருகிறது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் அவரால் பெரிய ரன் எடுக்க முடியவில்லை. இதற்குள் உடனடியாக அவரது பேட்டிங் குறித்து இந்திய பயிற்சியாளர் தெரிவித்த கருத்து சர்ச்சையாகி இருக்கிறது.
இந்திய பயிற்சியாளர் கருத்து
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு பிறகு ரியான் டென் டஸ்கேட் ரோகித் சர்மாவுக்கு நிறைய கிரிக்கெட் போட்டிகள் இல்லாததால் அவருடைய பேட்டிங் சரளமாக இல்லை என்பதாக கருத்து தெரிவித்திருந்தார். அணியில் இருக்கும் ஒரு வீரர் குறித்து ஒரு பயிற்சியாளர் இவ்வாறு பேசுவது தவறானது.
இதுகுறித்து மனோஜ் திவாரி பேசும் பொழுது ” நான் ரியான் உடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நான்கு வருடங்கள் இருந்திருக்கிறேன். அவர் நல்ல மனிதர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் ரோகித் சர்மா குறித்து பேசிய வார்த்தைகளுக்கு முன்பாக கொஞ்சம் யோசித்து இருக்க வேண்டும். அவர் நெதர்லாந்து அணிக்காக மட்டுமே சர்வதேச கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்”
5% கூட செய்ததில்லை
“மிகுந்த மரியாதையுடன் இன்னொன்றையும் நான் சொல்லிக் கொள்கிறேன். ரோகித் சர்மா தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் செய்துள்ள மகத்தான காரியங்களில் ஐந்து சதவீதத்தை கூட ரியால் செய்தது கிடையாது. சாம்பியன்ஸ் டிராபியை பெற்றுக் கொடுத்து ரோகித் சர்மா நாட்டையே சந்தோஷப்படுத்தினார். ரியான் தன் வீட்டுக்குள் இருந்து கொண்டு இப்படி கருத்தை சொல்லவில்லை. ஒரு அணியின் பயிற்சியாளராக இருந்து பேசுவது மோசமானது”
இதையும் படிங்க : 3வது ODI.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. தவறான அணியால் சிக்கிய கம்பீர்.. அந்த வீரர் தேவையா?.. தொடரை வெல்வோமா
“உங்கள் அணியில் இருக்கும் ஒரு வீரரை பற்றி இப்படி சொல்வது அவரது நம்பிக்கையை தளர்வடைய செய்யும். அவர் ஏன் இப்படிச் சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை. இதைப் பற்றி தன்னையே சுய பரிசீலனை செய்து பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட கருத்துக்களை அவர் சொல்லக்கூடாது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.






