“இவங்க நல்ல பிளேயர்னு இவங்கள நம்ப வச்சுட்டா போதும்” – கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி!

0
338
Hardikpandya

இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் பங்கேற்க இந்தியாவிற்கு வந்துள்ளது!

இந்திய அணி விளையாட இருக்கும் இந்த இரண்டு வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடர்களும் இந்திய கிரிக்கெட்டுக்கு இந்தக் காலகட்டத்தில் மிகவும் முக்கியமான தொடர்களாக அமைய இருக்கின்றது!

- Advertisement -

ஏனென்றால், தற்பொழுது மாறிவரும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு ஏற்ப இந்திய கிரிக்கெட்டை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கு உருவாகி இருக்கிறது!

இதன் பொருட்டு இந்திய அணி நிர்வாகம் டி20 இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்ததோடு இளம் வீரர்களைக் கொண்ட அணியையும் உருவாக்கி இருக்கிறது. ஹர்திக் பாண்டியாவின் அணி நாளை மாலை மும்பை வான்கடே மைதானத்தில் இலங்கை அணியை எதிர்த்து டி20 தொடரில் முதல் போட்டியை விளையாட இருக்கிறது!

இந்த நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா சில கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறார். அவர் கூறும் பொழுது
” பாருங்கள் ரிஷப்க்கு நடந்தது மிகவும் எதிர்பாராத துரதிஷ்டவசமான ஒன்று. யாரும் இதைக் கட்டுப்படுத்த முடியாது. ஒரு குழுவாக நாங்கள் அவருக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலையிலிருந்து சிறப்பாக மீண்டு வர நல்வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகளை தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு எங்களின் அன்பு எப்பொழுதும் இருக்கும். வெளிப்படையாக சொல்வதென்றால் அவர் அணிக்கு மிகவும் முக்கியமான ஒரு வீரர். ஆனால் இப்போது உள்ள நிலைமை எங்கு நிற்கிறது என்பதை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் எதிர்காலத்திற்கு என்ன தேவை என்பதை பார்த்துச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாம் இதைப் புரிந்து மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் ” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -

தொடர்ந்து பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா ” நான் வீரர்களிடம் கூறி இருக்கிறேன், நீங்கள் களத்திற்கு சென்று உங்களை வெளிப்படுத்துங்கள் என்று. அவர்களும் அதைச் செய்வார்கள். நாங்கள் அதிலிருந்து அவர்களை எடுத்து ஒரு நிலையான குழுவை உருவாக்குவோம். நான் அவர்களை இந்த நாட்டின் மிகச்சிறந்த வீரர்கள் என்று நம்ப வைக்க வேண்டும். அவர்கள் அதை நம்பி செயல்பட ஆரம்பித்து விட்டால், பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் அவர்களுக்கும் அணிக்கும் எந்த பிரச்சனையுமே இருக்காது” என்று கூறியிருக்கிறார்!