“இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வது கஷ்டம்.. காரணம் இதுதான்!” – கிரேம் ஸ்மித் விளக்கம்!

0
127
Smith

நேற்று, முதல்முறையாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி இந்திய தேர்வுக்குழுவால் அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த இந்திய அணியில் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா கேப்டன் ஆகவும் விராட் கோலி பேட்மேனாகவும் அணிக்கு திரும்பி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

- Advertisement -

இவர்கள் இருவரும் அணிக்கு வருவார்களா? என்பதுதான், மேற்கொண்டு டி20 உலகக் கோப்பைக்கு எப்படியான இந்திய அணியை எந்த மாதிரியான வீரர்களைக் கொண்டு உருவாக்குவது என்பதை முடிவு செய்வதாக இருந்தது.

எனவே இவர்கள் தற்போது இந்திய அணிக்கு திரும்பிவிட்ட காரணத்தினால், சில பரிசோதனை முயற்சிகளை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் செய்ய வேண்டிய தேவையில்லாமல் போகிறது. இதனால் உலக கோப்பைக்கு முன்பாகவே உறுதியான ஒரு இந்திய அணியை இதய கிரிக்கெட் நிர்வாகத்தால் கண்டறிய முடிந்திருக்கிறது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள தென் ஆப்பிரிக்கா லெஜன்ட் கேப்டன் கிரேம் ஸ்மித் ” இந்திய அணிக்கு பல புதிய வீரர்களை தேர்வு செய்வது என்பது, அதிக போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பணி சுமையை நிர்வகிப்பதற்காகத்தான். ஐபிஎல் இந்த இடத்தில் இந்திய அணிக்கு தேவையான திறமையான வீரர்களை உருவாக்குவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

- Advertisement -

எந்த மாதிரியான ஆடுகளங்களில் என்ன மாதிரியான நட்சத்திர வீரர்களை தேர்வு குழு விரும்புகிறார்கள் என்பதை கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியத் தேர்வுக்குழு தற்பொழுது என்ன மாதிரியான அணியை அமைக்கும் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். ஏனென்றால் தற்போது இந்தியாவில் நிறைய திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். எனவே இந்தியா அணியை அமைப்பதும், அதற்கான வீரர்களை தேர்வு செய்வதும் எளிதான வேலை கிடையாது.

டெஸ்ட் கிரிக்கெட் என்பது நாம் எல்லோரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டிய கிரிக்கெட் வடிவம். டி20 கிரிக்கெட் வடிவம் என்பது எதிர்கால கிரிக்கெட்டாக இருக்கிறது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெற்று இருப்பது, பல நாடுகளுக்கு கிரிக்கெட்டை கொண்டு சேர்க்க உதவும்.

உலகளாவிய வகையில் கால்பந்துக்கு சவால் விடும் வகையில் கிரிக்கெடால் மட்டுமே வர முடியும் என்று நான் நம்புகிறேன். இது எப்படி நடக்கும் என்பதை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன். இதற்கு மிக முக்கியமாக வருகின்ற ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெற்று இருப்பது அமையும்” என்று கூறியிருக்கிறார்!