இந்தியாவில் தற்பொழுது நடந்து வரும் 17 வது ஐபிஎல் சீசன் மே மாதம் 26ம் தேதி முடிவடைந்ததும், சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய நிகழ்வாக டி20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் இந்த முறை மொத்தம் 20 நாடுகள் பங்கு பெறுகின்றன.
இந்தியாவில் கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற்ற முடிந்த பிறகு இந்திய அணி 11 சர்வதேச டி20 போட்டிகளில் மூன்று தொடர்களில் விளையாடி இருக்கிறது. அங்கிருந்து நேராக எல்லா இந்திய வீரர்களும் டி20 கிரிக்கெட் விளையாடுவதற்கு ஐபிஎல் தொடர் வந்து விட்டார்கள்.
இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் வீரர்கள் செயல்படுவதை பொறுத்து டி20 உலகக் கோப்பை இந்திய அணி தேர்வு செய்யப்படுமா? என்கின்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் ஏற்கனவே டி20 உலக கோப்பை இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு விட்டது என்றும், அதில் ஏதாவது வீரர்கள் ஃபார்ம் இல்லாமல் போகிறார்களா? என்று மட்டுமே பார்க்கப்படும் என்றும்கூறப்படுகிறது.
நடக்க இருக்கும் டி20 உலக கோப்பைக்கு மே ஒன்றாம் தேதிக்குள் அணியை கொடுத்தாக வேண்டும். அதற்குப் பிறகு அந்த அணியில் மே 26 ஆம் தேதி வரையில் தேவைப்படும் மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்று ஐசிசி அறிவித்திருக்கிறது. எனவே இதன் காரணமாக ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் டி20 உலக கோப்பை இந்திய அணி அறிவிக்கப்படும் என செய்திகள் தெரிவிக்கிறது.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும் பொழுது “ஏப்ரல் கடைசி வாரத்தில் டி20 உலக கோப்பை இந்திய அணி அறிவிக்கப்படும். அந்த நேரத்தில் ஐபிஎல் தொடர் பாதிக்கு மேல் முடிவடைந்திருக்கும். எனவே வீரர்களின் ஃபார்ம் மற்றும் உடல் தகுதியை கணக்கிடுவதற்கு தேர்வு குழுவினருக்கு மிகவும் வசதியாக இருக்கும். அது பொறுத்து முடிவுகள் எடுப்பது சுலபமாக அமையும்.
இதையும் படிங்க : டாஸ் போட கேப்டனாக வராமல்.. பேட்ஸ்மேனாக ஆடும் கேஎல்.ராகுல்.. காரணம் என்ன? – பூரன் விளக்கம்
மே 19ஆம் தேதி ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைகிறது. எனவே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத அணிகளில் இருக்கும் டி20 உலகக் கோப்பை இந்திய அணிகள் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் முன்னதாகவே நியூயார்க் புறப்பட்டு செல்வார்கள். கடந்த குறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இப்படித்தான் முன்கூட்டியே சென்றார்கள்” என்று கூறியிருக்கிறார்.