இந்திய கிரிக்கெட்

இந்தியாவுடன் டெஸ்ட்.. வேற மாதிரி தயாராகும் ஆஸ்திரேலியா.. ரோகித் படை சமாளிக்குமா?.. வெளியான தகவல்கள்

இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்த வருடம் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்கிறது. தற்பொழுது இந்த தொடருக்கு தயாராவதற்காக ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பான வாய்ப்பை ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

- Advertisement -

2014 ஆம் ஆண்டில் இருந்து எந்த ஒரு டெஸ்ட் தொடரையும் ஆஸ்திரேலியாவிடம் இழக்காமல் இந்திய அணி மிக வெற்றிகரமாக இருந்து வருகிறது. இதில் முக்கியமாக கடந்த இரண்டு முறையும் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று வந்தது. 10 வருடங்களாக இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் ஆஸ்திரேலியா தடுமாறி வருகிறது.

இந்த நிலையில் இந்த முறை சொந்த நாட்டில் வைத்து இந்திய அணியை எப்படியாவது டெஸ்ட் தொடரில் வெல்ல வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் திட்டப்பட்டு பல வேலைகளை செய்து வருகிறது. ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து செல்லும் ஆஸ்திரேலியா அணி செப்டம்பர் 29ஆம் தேதி உடன் அந்தத் தொடர்களை முடித்துக் கொள்கிறது.

இதற்கு அடுத்து அக்டோபர் எட்டாம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு டெஸ்ட் தொடரான செஃபீல்ட் ஷீல்ட் டிராபி நடக்க இருக்கிறது. டிசம்பர் மாத மத்தியில் ஆஸ்திரேலியா பிக்பாஸ் டி20 லீக் தொடங்குவதற்கு முன்பாக இந்தத் தொடர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலிய க்கு எதிராக நவம்பர் 22 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் உள்நாட்டு டெஸ்ட் தொடரான செஃபீல்ட் ஷீல்ட் உள்நாட்டு டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இந்த நான்கு உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வீரர்களை விளையாட கூறி இருப்பதாகத் தெரிகிறது. எனவே ஆஸ்திரேலியா வீரர்கள் நல்ல முறையில் தயாராக முடியும்.

இதையும் படிங்க : வெறும் 6 நிமிஷம்.. அமெரிக்காவை விட சிறப்பா பாகிஸ்தான்ல சாம்பியன்ஸ் டிராபி நடக்கும் – சல்மான் பட் பேச்சு

அதே சமயத்தில் இந்திய அணி உள்நாட்டில் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து என இரண்டு அணிகளுக்கு எதிராகவும் மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணிக்கும் இந்த வகையில் டெஸ்ட் பயிற்சி கிடைக்கிறது. அதே சமயத்தில் ஆகஸ்ட் மாதத்தில் பெரிய அளவில் ஓய்வும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களிலும் சராசரியான ஓய்வும் இந்திய டெஸ்ட் வீரர்களுக்கு கிடைக்கிறது. எனவே பயிற்சியும் ஓய்வும் சரிசம அளவில் இருப்பதால் ரோகித் சர்மாவின் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியும் சிறப்பாகவே தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

- Advertisement -
Published by